தோனியா, விராட் கோலியா?? யாரோட பேட்டிங் பாக்க பிடிக்கும், யாருடன் பேட்டிங் செய்யவேண்டும்? – சிக்கலான கேள்விக்கு ஆர்சிபி வீராங்கனை டக்கர் பதில்!

0
1469

விராட் கோலியா? தோனியா? யாருடன் பேட்டிங் செய்ய விருப்பம்? என்று கேள்வி எழுப்பியவருக்கு தனது சிறப்பான பதிலை கொடுத்திருக்கிறார் ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி.

முதல்முறையாக பெண்களுக்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் வர்த்தக ரீதியாக ஐபிஎல்-க்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. இந்த ஆண்டு ஐந்து அணிகள் பங்கேற்கின்றன.

- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த ஐபிஎல் ஏலத்தில் முன்னணி வீராங்கனைகளை பல கோடிகள் கொடுத்து எடுத்தது. அவர்களில் குறிப்பிட்டதக்க விதமாக, நட்சத்திர இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானா, எல்லிஸ் பெர்ரி போன்ற வீராங்கனைகள் அந்த பட்டியலில் இருக்கின்றனர்.

இதற்கிடையில், ஆஸி., அணியை சேர்ந்த எல்லிஸ் பெர்ரி இடம், உங்களுக்கு விராட் கோலி, தோனி இருவரில் யாருடன் பேட்டிங் செய்ய மற்றும் யாருடைய பேட்டிங்கை பார்க்க பிடிக்கும் என்று சிக்கலான கேள்வியை எழுப்பினர். அதற்கு அவர் லாவகமாக பதில் கூறினார்.

“இரண்டு பேரையும் பேட்டிங் ஆடவிட்டு, இருவரையும் ரசிக்க பிடிக்கும். வெளியில் இருந்து நான் நன்றாக வேடிக்கை பார்க்கிறேன்.” என்றார்.

- Advertisement -

மேலும், எந்த விளையாட்டு வீரரை மிகவும் பிடிக்கும் என கேட்டதற்கு, 21 முறை கிராண்ட் ஸ்லாம் பதக்கம் வென்ற ரோஜர் பெடரர் மிகவும் பிடிக்கும் என பேசினார். “பலமுறை நான் அவருடன் அறையில் இருந்து பேசியிருக்கிறேன். அவர் அருகில் இருந்தால் என்னால் அமைதியாக இருக்க முடிந்ததில்லை. மனதிற்குள் மிகவும் ஆரவாரமாக இருக்கும்.” என கூறினார்.

இருப்பினும், நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் முதல் மூன்று லீக் போட்டியிலும தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி வீட்டிலும் சிக்கலிலும் இருக்கிறது.