“எங்க ஒவ்வொருத்தருக்கும் நியூசிலாந்து பிளான் வச்சிருப்பாங்க.. நாங்க இத செஞ்சா போதும்!” – கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பு பேட்டி!

0
645
Rohit

தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், நான்கு போட்டிகளில் நான்கையும் வென்று நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மிகவும் வலிமையான இடத்தில் இருக்கின்றன.

இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளை வென்று தென் ஆப்பிரிக்க அணி மிகவும் வலிமையாக இருக்கிறது. அவர்கள் நெதர்லாந்து அணி உடன் அதிர்ச்சி தோல்வி அடைந்திருக்காவிட்டால் தற்பொழுது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் நான்காவது இடத்திற்கு இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானை விட ஆஸ்திரேலியா சற்று வலிமையான அணியாக தென்படுகிறது. பெரும்பாலும் இங்கிலாந்து நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிவிட வாய்ப்பு இருக்கிறது.

அதே சமயத்தில் இன்று இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும், அந்த அணிக்கு ஏறக்குறைய 99% உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பு உறுதி ஆகிவிடும்.

லீக் சுற்றில் ஒன்பது போட்டிகளில் ஆறு போட்டிகளை வெல்லும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும். இந்த வகையில் இன்று வெற்றி பெறும் அணி ஐந்தாவது வெற்றியை பெரும். மேலும் மேற்கொண்டு இரண்டு சிறிய அணிகளுக்கு எதிராக விளையாடும். அதில் ஒரு போட்டியை வென்றாலும் கூட, அரையிறுதி வாய்ப்பு உறுதி ஆகிவிடும்.

- Advertisement -

இந்த நிலையில் இப்படியான முக்கியத்துவம் உள்ள போட்டிக்கு முன்பாக பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா “நியூசிலாந்து அணி பற்றி பேசும்பொழுது அவர்களுடைய திட்டங்கள்தான் ஞாபகத்துக்கு வருகிறது. அவர்கள் திட்டங்களில் மிகவும் வலிமையானவர்கள்.

அவர்களுக்கு கொடுக்கப்பட்ட திட்டங்களுக்கு ஏற்ப அவர்கள் விளையாடுவார்கள். அவர்களுக்கு எதிராக நீங்கள் விளையாடும் பொழுது உங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவர்களிடம் திட்டம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும்.

ஐசிசி தொடர்களில் அவர்கள் எங்களை நிறைய முறை தோற்கடித்திருக்கிறார்கள். எனவே தனிப்பட்ட முறையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டு, விளையாட்டை விளையாட முயற்சிப்பது அவசியம் என்று நான் நினைக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!