ஐபிஎல் தொடரில் 2008 முதல் 2010 வரை மும்பை அணியில் விளையாடி பின்னர் 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரை சென்னை அணியில் டுவைன் பிராவோ விளையாடினார். 2016&2017ஆம் ஆண்டு குஜராத் அணியில் விளையாடிய அவரை மீண்டும் சென்னை அணி நிர்வாகம் 2018 ஆம் ஆண்டு கைப்பற்றியது. 2018 முதல் கடந்த ஆண்டுவரை சென்னை அணியில் வழக்கம்போல விளையாடினார்.
ஐபிஎல் தொடரில் டெத் ஓவர்களில் மிக சிறப்பாக பந்துவீச கூடிய வேகப்பந்து வீச்சாளரும் இவர் முக்கியமானவர். 153 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இதுவரை 167 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் இவரது பவுலிங் எக்கானமி 8.36 மற்றும் பௌலிங் ஆவெரேஜ் 24.32 ஆகும்.
பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கில் இதுவரை இவர் 1537 ரன்களை குவித்துள்ளார். பேட்டிங்கில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 130.25 ஆகும். பந்துவீச்சு பேட்டிங் இந்த இரண்டில் மட்டும் அல்லாமல் ஃபீல்டிங்கிலும் டுவைன் பிராவோ பட்டையை கிளப்புவார். அதன் காரணமாகவே இவரை கைப்பற்ற ஒவ்வொரு அணியும் போட்டி போடும்.
மீண்டும் சென்னை அணியில் டுவைன் பிராவோ
இன்று நடைபெற்ற ஏலத்தில் சென்னை அணி இதுவரை 4 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது. அதன் மூலமாக மீண்டும் சென்னை அணியில் இவருடைய பயணம் தொடங்குகிறது.
சென்னை அணி என்று அவரை கைப்பற்றியதன் மூலம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பித்த 2008 முதல் தற்போது வரை தொடர்ந்து 15 வருட காலமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை டுவைன் பிராவோ தக்க வைத்துள்ளார்.
ஒரு சில வீரர்கள் இடைப்பட்ட நேரத்தில் விளையாட முடியாமல் போகும் சூழ்நிலை ஏற்படும். ஆனால் தொடர்ந்து 15 வருடகாலம் ஐபிஎல் தொடரில் பங்குகொள்ளும் முதல் வெளிநாட்டு வீரர் என்கிற சாதனைக்கு இன்று பிராவோ சொந்தக்காரராகியுள்ளார்.
சென்னை அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள டுவைன் பிராவோ,”நான் மீண்டும் வந்து விட்டேன், எப்பொழுதும் நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரன் தான்” என்று கூறியுள்ளார்.
சந்தோஷத்தில் சென்னை அணி ரசிகர்கள்
சென்னை அணி மீண்டும் அவரைப் கைப்பற்றிய செய்தி சென்னை அணி ரசிகர்களை பரவசம் அடையச் செய்துள்ளது. சென்னை அணி நிர்வாகம் எப்படியாவது ஃபேப் டு பிளேசிஸ் மற்றும் டுவைன் பிராவோ இவர்கள் இருவரையும் கைப்பற்றி விட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்தனர்.
ஆனால் டு பிளசிஸ்சை பெங்களூரு அணி 7 கோடி ரூபாய்க்கு கைப்பற்றிவிட்டது. ஃபேப் டு பிளேசிஸ் சென்னை அணிக்கு திரும்பவில்லை என்றாலும் மறுபுறம் டுவைன் பிராவோ அணிக்கு திரும்பியுள்ள செய்தி சென்னை அணி ரசிகர்களை சந்தோஷம் அடையச் செய்துள்ளது.