உலக கோப்பையில் நெதர்லாந்து வீரர் உலக சாதனை.. சச்சின் யுவராஜ் வரிசையில் தனி இடம்!

0
9355
Leed

இன்று உலகக்கோப்பையின் இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணியை ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான அணி எளிமையாக வென்று இருக்கிறது.

இந்தப் போட்டியில் முதல் பத்து ஓவர்கள் முடியும் முன்பாக 38 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி பகார், இமாம், பாபர் என மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

- Advertisement -

இந்த நிலையில் நடுவரிசையில் ரிஸ்வான் மற்றும் ஷகில் இருவரும் அமைத்த பார்ட்னர்ஷிப், மற்றும் இறுதிக்கட்டத்தில் நவாஸ் மற்றும் சதாப் இருவரும் அமைத்த பார்ட்னர்ஷிப் இரண்டும் பாகிஸ்தான் அணியை காப்பாற்றியது.

இந்த போட்டியில் வழக்கம்போல் நெதர்லாந்து அணியின் பீல்டிங் அபாரமாக இருந்தது. அதே சமயத்தில் பந்துவீச்சு சிறப்பாக அமைந்திருந்தது. இதன் காரணமாக 49 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 286 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

மிடில் ஓவர்களில் பந்து வீச வந்த நெதர்லாந்து அணியின் பாஸ் டி லீட் ஒன்பது ஓவர்கள் பந்து வீசி 62 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இவர் கொஞ்சம் ரன்கள் விட்டுத்தந்து இருந்தாலும் கூட, பாகிஸ்தான் அணியை இந்த ரன்களுக்குள் தடுத்து நிறுத்த, இவரது பந்துவீச்சுதான் முக்கிய காரணமாக இருந்தது.

- Advertisement -

மேலும் நெதர்லாந்து பேட்டிங் செய்ய வந்த பொழுது, நான்காவது வீரராக வந்த பாஸ் டி லீட் 68 பந்துகளுக்கு ஆறு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 67 ரன்கள் எடுத்து கொஞ்சம் நம்பிக்கை அளித்தார்.

இதன் மூலம் இவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகக் குறைந்த வயதில், ஒரே போட்டியில் அரைசதமும், நான்கு விக்கெட்டும் எடுத்த வீரர் என்ற உலகச் சாதனையைப் படைத்திருக்கிறார்.

சச்சின் அரைசதம் மற்றும் ஒரு விக்கெட், 18 வருடம் 251 நாட்கள்.
பால் ஸ்டெர்லிங் அரைசதம் மற்றும் இரண்டு விக்கெட், 20 வருடம் 196 நாட்கள்.
கெவின் கரன் அரைசதம் மற்றும் மூன்று விக்கெட், 23 வருடம் 284 நாட்கள்.
பாஸ் டி லீட் அரைசதம் மற்றும் நான்கு விக்கெட், 23 வருடம் 352 நாட்கள்.
யுவராஜ் சிங் அரைசதம் மற்றும் ஐந்து விக்கெட், 29 வருடம் 84 நாட்கள்.