2வது டி20யில் ரோஹித் ஷர்மா விக்கெட்டை கைப்பற்றி டுஷ்மந்த சமீரா புதிய சாதனை

0
179
Rohit Sharma and Chameera

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டி கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி கண்டது.இன்று 2ஆவது டி20 போட்டி சற்றுமுன்னர் நடந்து முடிந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த்து.

அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. இலங்கை அணியில் ஓபனிங் விளையாடிய பதும் நிசாங்கா அதிக பட்சமாக 53 பந்துகளில் 11 பவுண்டரி உட்பட 75 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பின்னர் விளையாடிய இந்திய அணி 17.1 ஆவது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 186 எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்றது.இந்திய அனியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 44 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 6 பவுண்டரி உட்பட 74* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்கமகாமல் இருந்தார். போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் இவரே கைப்பற்றினார்.

இந்த போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்கிற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிப்பதோடு மட்டுமல்லாமல் தொடரையும் கைபற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 ரன்னில் அட்டமிழந்த ரோஹித் ஷர்மா

முதல் போட்டியில் 32 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரி என 44 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா இன்றைய போட்டியில் 1 ரன் எடுத்து டுஷ்மந்த சமீரா பந்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இன்றைய போட்டியும் சேர்த்து இதுவரை டி20 போட்டிகளில் ரோஹித் ஷர்மா டுஷ்மந்த சமீராவிடம் 5 முறை தனது விக்கெட்டை பறிகொடுத்து இருக்கிறார். அதன் மூலமாக டி20 போட்டிகளில் ரோஹித் ஷர்மாவை 5 முறை அவுட்டாக்கிய ஒரே பந்து வீச்சாளர் என்கிற சாதனையை இன்று டுஷ்மந்த சமீரா நிகழ்த்தி காட்டியுள்ளார்.

இதுவரை இவர்கள் இருவரும் சந்தித்த டி20 போட்டிகளில் டுஷ்மந்த சமீரா 26 பந்துகளை ரோஹித் ஷர்மாவிற்கு எதிராக வீசியுள்ளார்.அதில் 32 ரன்கள் மட்டுமே குவித்து 5 முறை ரோஹித் ஷர்மா தனது விக்கெட்டை பறி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.