ஸ்கூல் கிரிக்கெட் மாதிரிஇலங்கையை பண்றீங்க.. இந்தியா ஆஸி அணிகிட்ட முடியுமா – இங்கிலாந்து வாகன் விமர்சனம்

0
1742

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியின் கைகளே முற்றிலும் ஓங்கி இருப்பதாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகன் இங்கிலாந்து அணியின் இந்த அணுகுமுறை குறித்து தனது கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து இரண்டு நாட்களுக்கு உள்ளாக 325 ரன்கள் குவித்தது.

அதற்குப் பிறகு பேட்டிங் செய்து வரும் இலங்கை அணி தற்போது வரை ஐந்து விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்து களத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் ஆக்ரோஷமான அணுகுமுறை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராகவும் தொடருமா? என்றும் அந்த இரண்டு அணிகளுக்கு எதிராக விளையாடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து வாகன் விரிவாக கூறும்போது “இதனை நான் காலத்தின் முடிவு போல உணர்ந்தேன். கையில் பேட்டோடு இங்கிலாந்து அணி ஆக்ரோஷமாக இருக்கிறார்கள். இதே போல ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு எதிராக இவர்கள் பேட்டிங் செய்வார்களா? செய்ய மாட்டார்கள். இலங்கை நிறைய சறுக்கல்களோடு களம் அமைத்தது. ஸ்கூல் கிரிக்கெட் விளையாடும் போதும் ஸ்கூலில் விளையாடிய போதும் உங்களை விட சிறந்தவர் யாருமில்லை என்று தோன்றும்.

இந்த கோடை காலத்தில் இங்கிலாந்து அணிக்கு மோசமான நாட்கள் என்ற பெரிதாக எதுவும் இல்லை. எனவே அவர்கள் இன்னமும் வெளியே வந்து தங்கள் விளையாட்டை விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். இங்கிலாந்து அணி விளையாடும் விதம் என்னை மிகவும் மகிழ்விக்கிறது. அவர்கள் வித்தியாசமான விஷயங்களை செய்யும் போது நான் மகிழ்கிறேன். ஆனால் அவர்கள் இன்னும் கவனத்தோடு விளையாட வேண்டும்.

இதையும் படிங்க:6678 ரன்.. 366 விக்கெட்.. சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த மொயின் அலி.. ஐபிஎல் 2025-ல் ஆடுவாரா.?

இனி கிரிக்கெட்டின் கடவுள்களோடு விளையாட வேண்டியிருக்கும். இதனால் இங்கிலாந்து அணி வரப்போகும் தொடர்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். அடுத்த ஒரு வருடத்தில் கடுமையான சவால்கள் இங்கிலாந்து அணிக்கு காத்திருக்கின்றன” என்று வாகன் கூறியிருக்கிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இங்கிலாந்து அணி இனி அடுத்த தொடர்களில் விளையாடவிருப்பதால் வாகன் இங்கிலாந்தை எச்சரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -