6678 ரன்.. 366 விக்கெட்.. சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த மொயின் அலி.. ஐபிஎல் 2025-ல் ஆடுவாரா.?

0
200

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரரான மொயின் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய அனுபவம் குறித்து சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

2014ஆம் ஆண்டு உள்நாட்டு கிரிக்கெட் தொடரிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டுக்காக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்காக மொயின் அலி அறிமுகமானார். இடது கை ஆட்டக்காரரான இவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்ச மூலமாக இங்கிலாந்து அணிக்கு முக்கிய பங்காற்றினார். மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் சேர்த்து இதுவரை 6678 ரன்களும், 366 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் மொயின் அலி சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடி பல ஆட்டங்களை வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் புதிய மாற்றத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விரும்புவதாகவும் அதனால் தான் இந்த ஓய்வு முடிவை அறிவிப்பதாகவும் மொயின் அலி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியது என் வாழ்நாளில் மறக்க முடியாத விஷயம். மீண்டும் இங்கிலாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாட முயற்சி செய்யலாம், ஆனால் நான் உண்மையில் விளையாட மாட்டேன் என்பது எனக்கு நன்றாக தெரியும். நான் ஓய்வு முடிவை அறிவித்தாலும் அது குறித்து வருத்தப்பட மாட்டேன்.

- Advertisement -

ஏனென்றால் நான் தற்போது போதுமான நிலையில் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும். நான் இன்னமும் விளையாட முடியும் என்று உணர்கிறேன். ஆனால் ஆனால் ஒரு அணியாக இங்கிலாந்து கிரிக்கெட் ஒரு மறுசுழற்சியை எதிர்பார்க்கிறது என்பதை புரிந்து கொள்கிறேன். அதனால் நான் யோசித்து இந்த முடிவை எடுத்திருக்கிறேன்” என்று சமீபத்தில் இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் உடன் ஏற்பட்ட ஒரு பேட்டியில் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடருக்கு பின்பு தனது ஓய்வு முடிவை விரைவில் அறிவிக்கப் போவதாக வெளிப்படுத்திய மொயின் அலி 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையிலும், 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் இங்கிலாந்து அணியில் இடம் பெற்றார்.

இதையும் படிங்க:இந்தியா மீது என் முதல் காதல்.. துலீப் டிராபியில் ஆடிய அனுபவம்.. பகிர்ந்த கெவின் பீட்டர்சன்

இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இளம் வீரர்களை உள்ளே புகுத்தி மாற்றத்தை எதிர்நோக்கும் நிலையில் அடுத்து வரும் கிரிக்கெட் தொடர்களுக்கு மொயின் அலி மற்றும் சில முன்னணி கிரிக்கெட் வீரர்களின் பெயரை சேர்க்கவில்லை. இதனால் மொயின் தற்போது இந்த முடிவை அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமே ஓய்வு பெறுவதாக மொயின் அலி அறிவித்திருக்கும் நிலையில் ஐபிஎல் மற்றும் பிரான்சிஸ் கிரிகெட் லீக் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிகிறது.

- Advertisement -