எஸ்ஏ டி 20 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதி விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய டேவிட் மில்லர் தலைமையிலான ராயல்ஸ் அணி 15 பந்துகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடர்
எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 18 வது ஆட்டத்தில் டாஸ் வென்ற டர்பன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி டர்பன் அணியில் டிகாக் மற்றும் பிரீக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.5 ஓவர்களில் 62 ரன்கள் குவித்தது. பிரீக் 25 ரன்னில் வெளியேறினார். அதற்குப் பிறகு மற்றொரு தொடக்க வீரர் டிகாக் 30 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 43 ரன்னில் வெளியேற, இவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த அருமையான தொடக்கத்தை மற்ற வீரர்கள் தவறவிட்டனர்.
இருப்பினும் மிடில் வரிசை வீரர்கள் ஓரளவு நன்றாக விளையாடினார்கள் மல்டர் 24 ரன்கள், ஸ்மட்ஸ் 22 பந்துகளில் 32 ரன்கள் என விளையாட டர்பன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் குவித்தது. ராயல்ஸ் அணித் தரப்பில் முஜீப் 2 விக்கெட் கைப்பற்றினார். குறிப்பாக ஜான் பார்ட்டின் நான்கு ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட விட்டுத்தராமல் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ராயல்ஸ் அணி களம் இறங்கியது.
பார்ல் ராயல்ஸ் அணி சிறப்பான வெற்றி
இதில் தொடக்க ஆட்டக்காரர் ஜோ ரூட் எதிர்பாராத விதமாக தான் சதித்த முதல் பந்திலேயே வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரிட்டோரியஸ் 13 பந்துகளில் அதிரடியாக விளையாடி 5 பவுண்டரியுடன் 23 ரன்கள் குவித்து வெளியேறினார். இதில் அதிரடியாக விளையாடிய ஹெர்மேன் 22 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 44 ரன்கள் குவித்தார். பிடில் வரிசை வீரர் வேன் பூரன் 41 பந்துகளில் 41 ரன்கள் அணியின் கேப்டன் டேவிட் மில்லர் 21 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க:உங்க கண்ணு முன்னாடியே தப்பு நடக்குது.. ஆனா நீங்களும் திரும்ப அதையே செய்றீங்க – ஸ்ரேயாஸ் ஐயரை விமர்சித்த பசித் அலி
இதனால் பார்ல் ராயல்ஸ் அணியை 17.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலமாக இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் முன்னேறி இருக்கிறது. டர்பன் அணி 7 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியுடன் 6 தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.






