உங்க கண்ணு முன்னாடியே தப்பு நடக்குது.. ஆனா நீங்களும் திரும்ப அதையே செய்றீங்க – ஸ்ரேயாஸ் ஐயரை விமர்சித்த பசித் அலி

0
111

இந்தியாவின் புகழ்பெற்ற டெஸ்ட் வடிவ கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி தற்போது நடைபெற்று வரும் நிலையில் மும்பை மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் மும்பை அணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டம் இழந்த விதம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி சில விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

விரைவாக வெளியேறிய முன்னணி வீரர்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் சொதப்பிய இந்திய வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற கட்டாயத்தை தொடர்ந்து இன்று தொடங்கிய ரஞ்சி டிராபி தொடரில் மும்பை மற்றும் ஜம்மு-காஷ்மீர் அணிகள் இணைந்து விளையாடின. இதில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 4 ரன், ரோகித் சர்மா 3 ரன், கேப்டன் ரகானே 12 ரன் என விரைவாக வெளியேற ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து பொறுப்பாக விளையாட வேண்டிய ஸ்ரேயாஸ் ஐயர் 7 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் என 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

முன்னணி வீரர்கள் விரைவாக வெளியேறிய நிலையில் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டிய ஸ்ரேயாஸ் ஐயர், வெள்ளைப் பந்து கிரிக்கெட் போல விளையாடி தேவையில்லாமல் தனது விக்கட்டை தாரை வார்த்தார். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடிய விதம் குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

பாசித் அலி விமர்சனம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும் போது ” இந்தப் போட்டியில் அய்யர் விளையாடிய விதத்தை கவனிக்க வேண்டும். அவர் 7 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மூன்று பேட்ஸ்மேன்கள் உங்கள் கண் முன்னே ஆட்டம் இழந்தனர். இந்த சமயத்தில் வெள்ளைப் பந்து கிரிக்கெட் விளையாடுவது போல விளையாடி இருக்கிறீர்கள். சிவப்பு பந்து கிரிக்கெட் நடக்கிறது என்றால் அதற்கு தகுந்தார் போல சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடுங்கள். இதுதான் என்னுடைய எளிய அறிவுரை. எனவே இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.

இதையும் படிங்க:எழுதி வச்சுக்கோங்க.. அடுத்த டி20 உலக கோப்பைல.. இவர்தான் நம்பர் 1 பவுலர் – முகமது கைஃப் கணிப்பு

ரோஹித், கில், ஜெய்ஸ்வால் என அவுட் ஆகும்போது ஐயர் பொறுப்பான ஆட்டத்தை விளையாடி இருக்க வேண்டும். அருமையாக விளையாடி சதம் அடித்திருக்க வேண்டும்” என்று பசித் அலி கூறி இருக்கிறார். இந்த நிலையில் மும்பை அணி 120 ரன்களில் ஆட்டம் இழக்க அதற்குப் பின்னர் விளையாடி வரும் ஜம்மு-காஷ்மீர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -