விராட் கேப்டனா இருந்தா அந்த சலுகை இருக்காது.. ஆனா ரோஹித் ஃபார்முலா வேற – உத்தப்பா பேட்டி

0
47

இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான வீரர்கள் கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் கேப்டன்களாக அணியை வழிநடத்தி இருக்கின்றனர்.

இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையேயான கேப்டன்சி வேறுபாடுகள் குறித்து இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி ரோஹித் சர்மா கேப்டன்ஷிப்

இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை மகேந்திர சிங் தோனிக்கு அடுத்தபடியாக விராட் கோலி மூன்று வடிவத்தொடரிலும் முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட்டார். தனது உடல் தகுதியில் எப்போதும் ஃபிட்டாக இருக்க விரும்பும் விராட் கோலி தமது அணி வீரர்களும் அதுபோல இருக்க வேண்டும் என்று நான் விரும்பக் கூடியவீராக வீரர். அவரது தலைமையில் இந்திய அணி ஐசிசி தொடர்களைத் தவிர இருதரப்பு முத்தரப்பு தொடர்களில் சிறந்த வெற்றிகளை பதிவு செய்தது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை நம்பர் ஒன் நிலைக்கு உயர்த்தியவர் விராட் கோலி.

விராட் கோலிக்கு பிறகு இந்திய அணியின் முழு நேர கேப்டனாக பதவி உயர்ந்த ரோகித் சர்மா சமீபத்தில் டி20 உலக கோப்பையை மகேந்திர சிங் தோனிக்கு அடுத்தபடியாக வென்று கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு நாள் தொடரிலும் இந்திய அணிக்காக குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கும் இவர்கள் இருவருக்கும் இடையேயான வேறுபாடுகள் குறித்த இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இருவரின் கேப்டன்ஷிப் பார்முலா இதுதான்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “தலைமைத்துவ பாணி என்பது எப்போதும் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்காது. விராட் கோலியின் தலைமைத்துவ பாணி என்பது மிகவும் பிரத்தியேகமாக இருக்கும். நீங்கள் என்னை போல பிட்டாக மாறினால் எனது திட்டங்களுக்கு பொருந்தி போவீர்கள் என்பதுதான் விராட் கோலியின் பார்முலா. ரோஹித் சர்மாவை பொறுத்தவரை அவரது கேப்டன்ஷிப் பாணி என்பது வேறு. நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் அங்கேயே இருங்கள்.

இதையும் படிங்க:தென்னாப்பிரிக்க அணிக்கு ரத்தினம் கிடைச்சிருக்கு.. இந்தப் பையன் அடுத்த சூப்பர் ஸ்டாரா வருவார் – தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்

உங்களது ஆட்டம் வரை குறித்து விவாதிப்போம், மேலும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே முன்னேற வழிவகை செய்வோம் என்பது மாதிரியான பாணியாக இருக்கும். இங்கு இரண்டு வகையான தலைவர்கள் இருக்கிறார்கள். ஒருவர் எனக்கு இதுதான் தேவை என்று சொல்லக்கூடிய வகையில் இருக்கிறார், மற்றொருவர் நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள் நான் உங்களை சந்தித்து நீங்கள் முன்னேற அதற்கு தகுந்த திட்டங்கள் அமைப்பேன் என்று மற்றொருவர் இருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -