துலிப் டிராபி 2025.. 6 அணிகள் 6 ஸ்டார் கேப்டன்கள்.. களத்தில் முக்கிய வீரர்கள்.. முழு அட்டவணை பட்டியல்

0
303
Duleep

இந்த ஆண்டுக்கான இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடரான துலிப் டிராபிக்கு அணிகள், கேப்டன்கள் மற்றும் அட்டவணை வெளியாகியிருக்கிறது.

இந்த முறை மொத்தம் ஆறு அணிகள் இடம்பெறுகின்றன. மேலும் தேசிய அணிக்காக விளையாடும் நட்சத்திர வீரர்கள் பல விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்த தொடருக்கு அதிகபட்ச எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

- Advertisement -

அணிகள் மற்றும் கேப்டன்கள்

இந்த முறை அணிகள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்திய மற்றும் வடகிழக்கு என மொத்தம் ஆறு மண்டலங்களாக ஆறு அணிகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஆறு அணிகளுக்கும் இசான் கிஷான் கிழக்கு, சர்துல் தாக்கூர் மேற்கு, சுப்மன் கில் வடக்கு, திலக் வர்மா தெற்கு, ஜோனதன் ராங்சன் வடகிழக்கு மற்றும் துருவ் ஜுரல் மத்திய மண்டலங்களுக்கு கேப்டன்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

தொடரின் அட்டவணை

இந்த தொடரில் ரியான் பராக், டேவ்தத் படிக்கல், ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கான், ருதுராஜ், ரஜத் பட்டிதார், முகமத் ஷமி, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப், ஹர்ஷித் ராணா, அன்சூல் காம்போஜ், முகேஷ் குமார் மற்றும் கலில் அஹமத் போன்ற முக்கிய வீரர்கள் விளையாடுகிறார்கள்.

இதையும் படிங்க : 218 ரன்.. சிஎஸ்கே பிரிவிஸ் 41 பந்து ருத்ர தாண்டவம்.. ஆஸி பரிதாபமான தோல்வி.. தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

நடப்பு ஆண்டுக்கான துலிப் டிராபி வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி துவங்கி நடைபெற இருக்கிறது. இதன் இறுதிப்போட்டி செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறுகிறது. முன்னணி வீரர்கள் இடம் பெறுகின்ற காரணத்தினால் இந்த தொடருக்கு முக்கியத்துவம் அதிகரித்து இருக்கிறது.

- Advertisement -