218 ரன்.. சிஎஸ்கே பிரிவிஸ் 41 பந்து ருத்ர தாண்டவம்.. ஆஸி பரிதாபமான தோல்வி.. தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

0
261
Brevis

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டிவால்ட் பிரிவிஸ் அதிரடி சதத்தால் தென் ஆப்பிரிக்கா அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றிருக்கும் தென் ஆப்பிரிக்கா அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றிருந்தது.

- Advertisement -

சிஎஸ்கே பிரிவிஸ் ருத்ரதாண்டவம்

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரிக்கி ரிக்கல்டன் 14, கேப்டன் மார்க்ரம் 18, லுகான் டி பிரிட்டோரியஸ் 10 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

இதைத் தொடர்ந்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். ஒருமுனையில் நினைத்து நின்று விளையாடிய டிவால்ட் பிரிவிஸ் 41 பந்தில் சதம் அடித்து, 56 பந்துகளில் 12 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் உடன் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 126 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்க டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் மற்றும் ஒரு டி20 போட்டியில் அதிக ரன் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரராக சாதனை படைத்தார். 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியா தோல்வி

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன் மிட்சல் மார்ஸ் 13 பந்தில் 22 ரன், ஹெட் 8 பந்தில் 5 ரன், கேமரூன் கிரீன் 7 பந்தில் 9 ரன், மேக்ஸ்வெல் 10 பந்தில் 16 ரன், அலெக்ஸ் கேரி 18 பந்தில் 26 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.

இதையும் படிங்க : ஜூலை மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருது.. சுப்மன் கில் 4வது முறையாக வென்று சாதனை

இன்னொரு முனையில் அதிரடி காட்டிய டிம் டேவிட் 24 பந்தில் நான்கு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. மபாகா மற்றும் கார்பின் போஸ் தல மூன்று விக்கெட் வீழ்த்தினார்கள். தென் ஆப்பிரிக்கா அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை தற்காலிகமாக சமன் செய்திருக்கிறது.

- Advertisement -