Uncategorized

துலீப் கோப்பை அரையிறுதி.. ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஏமாற்றம்.. 184 ரன்கள் குவித்த ருதுராஜ்

2025- 26 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் உள்நாட்டு சீசன் துலீப் கோப்பை உடன் தொடங்குகிறது. இதில் ஒவ்வொரு அணிகளும் ஜோன் மூலம் பிரிக்கப்பட்டு டெஸ்ட் போட்டிகளாக நடத்தப்படும். இதில் அரை இறுதி ஆட்டத்தில் தற்போது வெஸ்ட் ஜோன் அணியும், சென்ட்ரல் ஜோன் அணியும் பல பரிட்சை நடத்தியது.

- Advertisement -

இதில் வெஸ்ட் ஜோன் அணியில் இங்கிலாந்து தொடரில் அபாரமாக விளையாடிய ஜெய்ஷ்வால், நட்சத்திர இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூர் மற்றும் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் களமிறங்கினர். சென்ட்ரல் ஜோன் அணியில் கலீல் அகமத் தீபக்சாகர், யாஷ் தாக்கூர்,  ரஜத் பட்டிதார் உள்ளிட்டோர் விளையாடுகின்றனர்.

ஜெய்ஸ்வால் ஏமாற்றம்:

இந்த நிலையில் பெங்களூரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் ஜோன் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் வெறும் நான்கு ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.

இதேபோன்று மற்றொரு தொடக்க வீரரான ஹார்விக் தேசாய் 1 ரன்னில் வெளியேற ஆரிய தேசாய் 84 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இந்த நிலையில் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ருதுராஜ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர்.

- Advertisement -

ருதுராஜ் அபார சதம்:

இதில் ஸ்ரேயாஸ்  அதிரடியாக விளையாடி நான்கு பவுண்டரிகள் என 28 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தபோது, கலீல் அகமதின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். ஒரு முனையில் டிக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.ருதுராஜ் ஆட்டமிழக்க வைக்க முடியாமல் சென்ட்ரல் ஜோன் அணி வீரர்கள் தடுமாறினர்.

இதையும் படிங்க:ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த கேப்டன் என்பது அர்த்தம் இல்லாதது.. அவரை இந்திய கேப்டன் ஆக்க முடியாது – சந்திப் ஷர்மா பேச்சு

சிறப்பாக விளையாடிய அவர் 206 பந்துகளை எதிர் கொண்டு 184 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 25 பவுண்டர்களும், ஒரு சிக்ஸரும் அடங்கும். இதன் மூலம் 79 ஓவர் முடிவில் வெஸ்ட் ஸோன் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்திருக்கிறது. கலீல் அஹமத் இரண்டு விக்கெட்டு களையும் தீபக் சாகர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். தற்போது இந்தியாவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதில் ருதுராஜ்க்கு இடம் கிடைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- Advertisement -
Published by