உலக டெஸ்ட் பைனலில் டியூக் பந்து; இந்தப் பந்துக்கும் மற்ற பந்துகளுக்கும் என்ன வித்தியாசம்? என்ன ஸ்பெஷல்?

0
536
Wtc2023

இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான இறுதிப்போட்டி வருகின்ற ஏழாம் தேதி இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது!

இந்த இறுதிப்போட்டியில் டியூக் பந்துகள் பயன்படுத்தப்படும் என்று ஐசிசி அறிவித்து இருக்கிறது. கடந்த முறை இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடந்த பொழுதும் பி. எஸ்1 என்ற டியூக் பந்தே பயன்படுத்தப்பட்டது.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் டியூக், கூக்கபுரா மற்றும் எஸ்.ஜி பந்துகள் பயன்படுத்த மட்டுமே அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற பந்துகளுக்குச் அனுமதி கிடையாது.

டியூக் பந்துகள் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. கூக்கபுரா பந்துகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. எஸ்.ஜி.பந்துகள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது.

டியூக் மற்றும் எஸ்.ஜி பந்துகள் கைகளால் தைக்கப்படுகின்றன. கூக்கபுரா பந்துகள் பாதி கையாலும் பாதி இயந்திரத்தாலும் தைக்கப்படுகின்றன. கையால் தைக்கப்படும் பந்துகளில் தையல் நெருக்கமாக இருக்கிறது. இதனால் பந்து அதன் வடிவத்தை சீக்கிரம் இழக்காமல் அதிகம் உழைக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்தில் பொதுவாக மேகமூட்டமான காலநிலையும் பச்சையான ஆடுகளங்களும் இருக்கின்றன. இங்கு பந்தின் தையல் மற்றும் வடிவம் சரியாக இருப்பதற்கு டியூக் பந்து சரியாக இருக்கிறது.

இந்தியா கடினமான சூழ்நிலைகளையும், ஆடுகளம் வெடிப்பாகவும் இருக்கும். எனவே இங்கு நீடித்து உழைக்க, நல்ல மொத்தமான நூலால் தைக்கப்படுகின்ற எஸ்.ஜி பந்துகள் தேவையாக இருக்கின்றன.

ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா போன்ற எகிறும் தன்மையைக் கொண்ட ஆடுகளங்களுக்கு, பந்து அதன் வடிவத்தைச் சீக்கிரம் இழந்தாலும் கூட கூக்கபுரா பந்துகள் சரியாக இருக்கின்றன.

பெரும்பான்மை வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் டியூக் பந்துகளையே விரும்புகிறார்கள். இது ஆரம்பத்தில் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல உதவியாக இருக்கும். மேலும் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு இடையே சரியான போட்டி சமநிலையைக் கொண்டிருக்கும்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் எஸ்.ஜி பந்துகள் நல்ல கடினமான நூலால் தைக்கப்படுவதாக இருந்தாலுமே, சமீபக் காலமாக இந்திய வீரர்களுக்கு, இந்தப் பந்தின் மேல் விருப்பம் கிடையாது. ஏனென்றால் பந்து வேகமாக அதன் தன்மையையும் வடிவத்தையும் இழக்க ஆரம்பிக்கிறது என்கின்ற குற்றச்சாட்டு இந்திய வீரர்களால் முன்வைக்கப்படுகிறது.

இந்திய வீரர்கள் அஸ்வின் மற்றும் விராட் கோலி இருவருமே எஸ்.ஜி பந்து மீது தங்களது அதை திருப்தியை தெரிவித்து இருந்தார்கள். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் டியூக் வகை பந்துகளைப் பயன்படுத்துவது சிறப்பானது என்றும், அந்த பந்து மிகவும் தரமுடையதாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.