“டிஆர்எஸ் எங்களுக்கு எதிராக போய்விட்டது..மிகவும் ஏமாற்றம் அடைய வைத்து விட்டது!” – கேப்டன் பாபர் அசாம் வருத்தமான பேச்சு!

0
1223
Babar

இன்று சென்னை சேப்பாக்கத்தில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், பாகிஸ்தான் தோற்றால் அரை இறுதி வாய்ப்பை இழக்க வேண்டும் என்கின்ற நெருக்கடியுடன் களம் இறங்கியது.

இந்த அழுத்தம் மிகுந்த போட்டியில் பரபரப்பான நிலையில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்திருக்கிறது.

- Advertisement -

இதன் மூலம் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்று உடன் வெளியேறுவது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. தற்போதைய சூழலில் அரையிறுதியில் ஆசிய அணிகளில் இந்தியா மட்டுமே இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 270 ரன்கள் எடுத்தது ஆனால் 46.4 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது. மீதமிருந்த பந்துகளுக்கு நின்று விளையாடி இருந்தால் இன்றைய போட்டியின் முடிவு மாறியிருக்கும்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி எளிதான நிலையில் இருந்தது. ஆனால் அந்தப் பக்கம் மிகச் சிறப்பாக ஆடிவந்த எய்டன் மார்க்ரம் 91 ரன்னில் தேவையில்லாத ஷாட் செலக்ஷனால் ஆட்டமிருந்து போட்டியில் நெருக்கடியை உண்டாக்கினார். இல்லையென்றால் எளிதாகவே தென் ஆப்பிரிக்கா வென்று இருக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் தோல்விக்கு பின் பேசிய பாகிஸ்தான அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறும்பொழுது “மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. நாங்கள் நன்றாகத்தான் போராடினோம். ஆனால் 10 முதல் 15 ரன்கள் குறைவாக இருந்து விட்டோம்.

எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதத்தில் அவர்கள் நன்றாக இருந்தார்கள் என்று நான் நினைக்கிறேன்.

டிஆர்எஸ் என்பது நடுவர்களின் முடிவு. இது விளையாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனாலும் இன்று எங்கள் பக்கம் துரதிஷ்டவசமாக டிஆர்எஸ் இல்லாதத, எங்கள் வீரர்களை ஏமாற்றம் அடைய வைப்பதாக இருக்கிறது.

இந்த போட்டியில் என்று அரையிறுதி வாய்ப்பில் நிலைத்திருக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நாங்கள் அதைத் தவற விட்டு விட்டோம்.

அடுத்த மூன்று போட்டிகளில் எங்களால் முடிந்த வரை முயற்சிப்போம். மூன்று போட்டிகளுக்குப் பிறகு நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது குறித்து பார்ப்போம்!” என்று கூறியிருக்கிறார்!