ரிங்கு சிங் வெளியிட்ட கனவு ODI உலக கோப்பை அணி.. ரோகித்துக்கு இடமில்லை!

0
6387
Rinku

இந்திய கிரிக்கெட்டில் இப்பொழுது உத்தரபிரதேசத்தை சேர்ந்த 27 வயதான இடது கை பேட்ஸ்மேன் கவனம் ஈர்க்கக்கூடியவராக இருந்து வருகிறார்.

மிகவும் வறுமையான பின்னணியில் இருந்து வந்த அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சிறப்பாக விளையாடியதன் மூலம் வெளி உலகத்திற்கு தெரிந்தார்.

- Advertisement -

இந்த ஆண்டு குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்கள் விலாசி கொல்கத்தா அணியை வெல்ல வைத்தார். மேலும் பினிஷராக 14 போட்டிகளில் 474 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதன் மூலம் அயர்லாந்து டி20 தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு பெற்று பினிஷர் இடத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். மீண்டும் தற்பொழுது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்கு நாக்அவுட் சுற்றில் இரண்டு முறை மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தற்போது தங்கப்பதக்கத்தை வென்ற அணியில் இடம் பெற்ற இவர் தனது கனவு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணியை வெளியிட்டிருக்கிறார். அந்த அணிக்கு கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருக்கிறார்.

- Advertisement -

இந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ்பட்லர் மற்றும் தனது சக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் ஆகியோரை வைத்திருக்கிறார். மூன்று மற்றும் நான்காம் இடங்களில் விராட் கோலி, ஸ்டீவன் ஸ்மித் இருக்கிறார்கள். ஐந்து மற்றும் ஆறாம் இடங்களில் பென் ஸ்டோக்ஸ் மகேந்திர சிங் தோனி வருகிறார்கள்.

மேலும் ஏழு மற்றும் எட்டு இடங்களில் சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் இருக்கிறார்கள். ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களில் ஆண்ட்ரூ ப்ளின்ட்டாப், மிட்சல் ஸ்டார்க் வருகிறார்கள். இந்த பேட்டியில் ரிங்கு சிங் ஞாபகம் மறதியாக 11ஆவது வீரரை குறிப்பிட மறந்துவிட்டார்!