“என்னாலதான் டிராவிட்டுக்கு இந்த நிலைமை.. சீக்கிரம் மாற வாழ்த்துக்கள்!” – கங்குலி ஆச்சரிய பேச்சு!

0
801
Ganguly

2021 ஆம் ஆண்டு நவம்பரில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்த இடத்திற்கு ராகுல் டிராவிட் கொண்டுவரப்பட்டார்.

உள்நாட்டில் இளம் இந்திய அணியை பயிற்சியாளராக வழி நடத்தி வந்த ராகுல் டிராவிட்டை, அப்போது கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த அவருடைய நண்பர் கங்குலி வற்புறுத்தி இந்த பதவிக்கு கூட்டி வந்தார்.

- Advertisement -

ராகுல் டிராவிட்டுக்கு தேசிய இந்திய அணிக்கு பயிற்சி அளிப்பதில் விருப்பம் இல்லை. அவர் இதற்கு பலமுறை மறுத்தும் கங்குலி தொடர்ந்து வற்புறுத்தியதால் மட்டுமே இறுதியில் ஏற்றுக்கொண்டார்.

ராகுல் டிராவிட் எப்பொழுதும் பரிசோதனைகளை செய்ய தயங்காதவர். அதற்கான பலன் கொஞ்சம் தாமதமாகத்தான் கிடைக்கும். இந்த முறையும் அப்படித்தான் இந்திய அணிக்கு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் கிடைத்தது. ஆனால் துரதிஷ்டவசமாக இறுதிப்போட்டியில் அவர்கள் தோல்வி அடைந்தார்கள்.

அதே சமயத்தில் ராகுல் டிராவிட் பயிற்சி காலத்தில் இந்திய அணிக்குள் கொண்டுவரப்பட்ட எல்லா வீரர்களுக்கும் இதுவரையில் அங்கங்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. யாருடைய எதிர்காலத்தையும் அவர் முடித்து வைக்கவில்லை. வீரர்கள் நம்பிக்கை இழக்காத வகையில் தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்துக் கொண்டே வருகிறார்கள்.

- Advertisement -

ராகுல் டிராவிட் மீண்டும் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக வந்தது குறித்து பேசி உள்ள கங்குலி கூறும்பொழுது “நான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த பொழுது, அவரை தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வற்புறுத்தி சம்மதிக்க வைத்தேன். அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அவர் விரும்புகிறாரா இல்லையா என்பது ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான் இருந்தது. மற்றொரு உலகக் கோப்பைக்கு நான் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் உலகக் கோப்பைக்கு ஏழு மாதங்கள் இருக்கின்றன. இந்த முறை இரண்டாவது இடத்தை பிடிக்காமல் சாம்பியனாக வரட்டும்.

குறைந்தபட்சம் அவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஆதிக்கத்தை தொடர்கிறார்கள். அவர்கள் ஒருநாள் இந்தப் பாலத்தைக் கடப்பார்கள். கோப்பையை வெல்வார்கள். இறுதிப் போட்டிகள் ஆஸ்திரேலியா 47 ரன்னுக்கு மூன்று விக்கெட் இழந்து இருந்தது. மேற்கொண்டு ஒரு விக்கெட் கிடைத்திருந்தாலும் மாறி இருக்கலாம். ஆனால் அந்த அதிர்ஷ்டம் அவர்களுக்கு தள்ளிக் கொண்டே போகிறது!” என்று கூறி இருக்கிறார்!