அப்ப டிராவிட்? இந்தியாவை வைத்து பரிசோதனை செய்யும் வெஸ்ட் இண்டீஸ் – ரோமன் பவல் உண்மையை உடைத்தார்!

0
232
Rovman Powell

இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் சமீபத்தில் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்றது. இந்த தகுதி சுற்றுப்போட்டியில் மிக மோசமாக விளையாடி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை வரலாற்றில் முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி இடம்பெற தவறியது!

இதற்கு அடுத்து உள்நாட்டில் வலிமையான இந்திய அணியை எதிர்த்து மூன்றுவிதமான கிரிக்கெட் தொடர்களிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது விளையாடி வருகிறது. மிகச் சிறிய அணிகளுடன் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி விளையாடுகின்ற காரணத்தினால் இரண்டு நாட்டு ரசிகர்களிடமும் இந்த தொடருக்கு பெரிய வரவேற்பு இல்லை என்பதுதான் உண்மை.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வலிமையான இந்திய அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது முன்னிலையில் இருக்கிறது.

நேற்று முதல் டி20 போட்டியில் வெற்றிக்குப் பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோமன் பவல் “பேட் செய்வது கடினமாக இருந்தது. எங்களுக்கு எப்பொழுதும் ஆரம்பம் நன்றாகவும் நடுவில் மிக மெதுவாகவும் இருப்பது வழக்கம். இந்தத் தொடரின் முடிவு என்பது, வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொண்டு ஆட்டத்தின் நடுவில் விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்தே அமையும்.

இதன் காரணமாக இடது கை பேட்ஸ்மேன்களின் தேவை நடுவில் அதிகரிக்கிறது. ஜேசன் ஹோல்டர் வீசிய அனைத்து ஓவர்களும் அருமையாக இருந்தது. இடைவேளையின் போது அவர் எங்களை பந்துவீச்சின் வேகத்தை அதிகரிக்குமாறு கூறினார்.

- Advertisement -

வெற்றி பெற்றது ஒரு நல்ல உணர்வு. தொடரை நேர்மறையாக இருந்து ஆரம்பிப்பது குறித்து நாங்கள் ஆலோசனை செய்தோம். இன்று அதை அப்படியே செயல்படுத்தினோம். இந்தியர்களின் பந்துவீச்சை பார்த்து எங்களிடம் இன்னும் ஒரு ஸ்பின்னர் இருந்திருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் எங்களின் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்!” என்று கூறியிருக்கிறார்!

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து, தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணி தொலைநோக்காக டி20 கிரிக்கெட் வடிவத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களை நடுப்பகுதியில் விளையாடுவதை பயிற்சியாக அனுபவமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. டிராவிட் பரிசோதனை செய்கிறாரோ இல்லையோ, இந்திய அணியை வைத்து வெஸ்ட் இண்டீஸ் தெளிவான முறையில் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறது!