ஐபிஎல் 2024-ல் அதிரடி மாற்றம் … புதிய வீரர்களை வாங்க காசில்லாமல் தவித்த சிஎஸ்கே மும்பை அணிகளுக்கு ஜாக்பாட்!

0
1352

உலக கிரிக்கெட் லீக் போட்டிகளுக்கு முன்னோடியாக திகழும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் வீரர்களுக்கான ஏலம் வருகின்ற டிசம்பர் மாதம் நடக்க இருப்பதாக பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் போட்டிகள் துவங்குவதற்கு முன்பாக வீரர்களுக்கான ஏலம் நடைபெறும். கடந்த ஆண்டு முதல் இது மினி ஏளமாக நடத்தப்பட்டு வருகிறது . கடந்த வருடம் டிசம்பரில் கொச்சியில் வைத்து நடைபெற்ற வீரர்களுக்கான ஏலத்தில் இங்கிலாந்து அணியின் சாம் கரன் 18.5 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவர்தான் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெயரும் பெற்றார்.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹாரி புரூக்ஸ் ஆகியோரும் அதிக விலைக்கு வாங்கப்பட்டனர். மேலும் கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பேக்ட் பிளேயர் விதிமுறையின் வெற்றி ஐபிஎல் ஏலத்தில் பல மாற்றங்களை கொண்டு வருவதற்கு பிசிசிஐக்கு வழி வகுத்திருக்கிறது . இதற்கு முன்பு 95 கோடி ரூபாயாக இருந்த பர்ஸ் வேல்யூ தற்போது 100 கோடியாக பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

இது ஐபிஎல் அணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. சென்னை அணிக்கு கடந்த ஏலத்தின் போது 1.5 கோடி ரூபாய் மட்டுமே மிச்சம் இருந்தது. தற்போது 5 கோடி ரூபாய் ஏலத்தில் அதிகப்படுத்தப்பட்டிருப்பதால் அவர்கள் வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்கு அது உதவியாக இருக்கும். மேலும் அணியில் இருந்து வீரர்கள் ரிலீஸ் செய்யப்படும் போது அந்தத் தொகையும் புதிய வீரர்களையும் திறமையான வெளிநாட்டு வீரர்களையும் ஏலத்தில் வாங்க உதவும்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கைவசம் கடந்த ஐபிஎல் ஏலத்திற்கு பிறகு 50 லட்சம் ரூபாய் மட்டுமே இருந்தது. தற்போது இந்த புதிய விதிகளின் மூலம் 5 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அவர்களாலும் புதிய வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்ய முடியும். இதன் காரணமாக இந்த ஆண்டு ஏலத்தில் என்ன செய்வதென்று இருந்த சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து பேசி இருக்கும் பிசிசிஐ நிர்வாகி” 2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறும் என தெரிவித்திருக்கிறார். தற்போது அனைத்து கவனமும் உலகக்கோப்பையின் மீது மட்டுமே இருப்பதாகவும் உலகக் கோப்பை முடிவிற்கு பின்னர் மினி ஏலம் நடைபெறும் இடம் மற்றும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த மினி ஏலம் டிசம்பர் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் நடைபெறும் என தெரிவித்திருக்கும் அவர் மும்பை கொல்கத்தா கொச்சி ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத் இந்த ஐந்து நகரங்களில் ஒரு நகரத்தில் வைத்து நடைபெறும் எனவும் தெரிவித்தார்.