“உங்களுக்கு வலிக்கவே இல்லையா?.. ஏன்னா நீங்க ஃபைட் பண்ணவே இல்ல!” – ரமீஷ் ராஜா அதிரடி தாக்கு!

0
1489
Ramiz

நேற்று இந்திய அணி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது!

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மூன்று துறைகளிலும் எந்தவித பெரிய சண்டையையும் செய்யாமல் இந்திய அணியிடம் சரணடைந்தது. ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளுக்கு நல்ல நிலைமையில் இருந்த பாகிஸ்தான அணியை, இந்திய பந்துவீச்சாளர்கள் மொத்தமாக வீழ்த்தினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த பொழுது கேப்டன் ரோஹித் சர்மா தன்னுடைய வழக்கமான அதிரடியால், பாகிஸ்தான் அணிக்கு இருந்த சிறு வாய்ப்பையும் முடித்து வைத்தார். இந்திய அணி 30.3 ஓவர்களில் எளிமையாக வெற்றி பெற்றது.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரும் கூறும் பொழுது “இது பாகிஸ்தானை காயப்படுத்த வேண்டும் ஏனென்றால் அவர்கள் எந்த வித போட்டியையும் காட்ட வில்லை. இந்தியாவுக்கு எதிராக விளையாடும் பொழுது மிகப்பெரிய கூட்டம் இருப்பதையும், அதனால் உருவாகும் அழுத்தத்தையும் நான் புரிந்து கொள்கிறேன்.

ஆனால் பாபர் அசாம் இந்த அணியை நான்கைந்து ஆண்டுகளாக வழிநடத்தி உள்ளார். எனவே நீங்கள் அந்தந்த சூழ்நிலையில் உயர வேண்டும். உங்களால் வெற்றி பெற முடியாவிட்டாலும் கூட நீங்கள் கடுமையான போட்டியைக் கொடுக்க வேண்டும். பாகிஸ்தானால் இதையே செய்ய முடியவில்லை.

- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பையில் தங்கள் வெற்றியை தக்கவைத்த இந்தியாவுக்கு பாராட்டுகள். ஏனெனில் இது இந்தியாவுக்கும் எளிதான போட்டி கிடையாது. அவர்கள் வெற்றியை தக்க வைக்க வேண்டும் என்கின்ற மிகப்பெரிய அழுத்தத்தில் விளையாடினார்கள். ஆனால் அவர்கள் அதை சிறப்பாக கையாண்டு இருக்கிறார்கள்.

பாபர் அசாம் இளம் வீரர்களைக் கொண்டு இதற்கு ஒரு சிறந்த தீர்வை கண்டறிய வேண்டும். அந்த அணிக் கூட்டங்களில் அவர்கள் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும். எங்களது சுழற்பந்துவீச்சு துறை போராடி வருகிறது. 50 அல்லது 49 ரன்கள் எடுத்து வீரர்கள் வெளியேறக்கூடாது!” என்று கூறியிருக்கிறார்!