கவலைப்படாதிங்க ஸ்மித்தை இந்த இந்திய பவுலரை வைத்து ஈஸியா தூக்கிடலாம் – இர்பான் பதான் கூறும் காரணங்கள்!

0
791
Irfan Pathan

இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான ஓட்டத்தின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகள் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இந்தியாவில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி குறைந்தபட்சம் 3 டெஸ்ட் போட்டிகளை வென்றால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம்.

இந்த நிலையில் இந்த போட்டி இந்தியாவில் நடைபெறுவதாலும், மேலும் இந்திய அணியின் கடைசி இரண்டு ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்பயணங்களில் ஆஸ்திரேலியா தோற்கடித்துள்ளதாலும், இந்த முறை இந்தத் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது!

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி நிர்வாகமும் வீரர்களும் தொடருக்கு முன்பாக பல்வேறு வகையான கருத்துக்களை கூறி அனலை கூட்டி வருகிறார்கள். மேலும் இந்தியா வந்து பயிற்சி போட்டிகளில் விளையாடாமல் நேராக பெங்களூர் சென்று சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை வாங்கி பயிற்சி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அந்த அணியின் ஸ்டீவன் ஸ்மித் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்பது பலரது கணிப்பாக இருக்கிறது. அவரை சீக்கிரம் வீழ்த்துவதன் மூலமே இந்திய அணியின் வெற்றியும் இருக்கலாம் என்று நம்புகிறார்கள். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் அவருக்கு எதிராக எந்த இந்திய பந்துவீச்சாளர் அச்சுறுத்தலாக இருப்பார் என்ன காரணம் என்று விளக்கி இருக்கிறார்.

இர்பான் பதான் கூறும்பொழுது
” சந்தேகமே இல்லை ஸ்மித் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரர்தான். இந்திய பந்துவீச்சாளர்களை சிரமப்படுத்திய ஆஸ்திரேலிய வரலாற்றைப் பார்த்தால் அவர் மேலே இருக்கிறார். டன் கணக்கில் அவர் ரண்களை குவித்துள்ளார். அவர் பாட்டம் ஹாண்ட் பயன்படுத்தி விளையாடி ஆப் மற்றும் லெக் சைடில் ரன்கள் எடுப்பதற்கான வழிகளை காண்கிறார். இதற்கு இந்திய அணி இடம் சரியான திட்டங்கள் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ஸ்மித்தின் சவால் இந்திய அணிக்கு இருக்கும். ஆனால் எனக்கு ஒரு உணர்வு இருக்கிறது என்னவென்றால் அக்சர் படேல் அவருக்கு எதிராக நல்ல எண்களை கொண்டு உள்ளார். அவர் எல்லாப் போட்டிகளிலும் விளையாடினால் அவருக்கு எதிராக பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம். அவர் வீசும் லைன் மற்றும் லென்த், அவர் வீசும் நேரான பந்துகள் ஸ்மித்தை எல்.பி.டபிள்யு இல்லை போல்ட் முறையில் ஆட்டமிழக்க செய்யலாம். குறிப்பாக ஸ்மித் பாட்டம் ஹேண்டில் விளையாடுவதால் ஸ்டெம்ப்களை குறி வைத்து வீசப்படும் பந்துகளில் அவரை ஆட்டம் இழக்க வைக்க முடியும்!” என்று கூறி இருக்கிறார்!