கவலைப்படாதிங்க தோனி இந்த முறை முன்கூட்டியே சொல்லிவிட்டுதான் ஓய்வு பெறுவார்; காரணம் இதுதான்- ஸ்காட் ஸ்டைரிஸ் நம்பிக்கை!

0
325
Dhoni

இந்த வருடம் ஐபிஎல் தொடரில் எந்த அணிகள் பிளே ஆப்ஸ் போகும்? யார் கோப்பையை கைப்பற்றுவார்கள்? என்கின்ற எதிர்பார்ப்பைத் தாண்டி, ஒரே ஒரு வீரரைச் சுற்றி அதிகப்படியான எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. அவர் மகேந்திர சிங் தோனி!

இந்திய அணிக்கு டி20 மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைகளை வென்று கொடுத்தது மட்டும் இல்லாமல், இந்திய கிரிக்கெட் வாரியம் 15 ஆண்டுகளைத் தாண்டி 16 ஆவது ஆண்டாக நடத்தி வரும் ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி, நான்கு முறை கோப்பைகளை வென்றதோடு, மட்டுமில்லாமல் அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கும், அதிகம் முறை இறுதிப் போட்டிக்கும் அழைத்துச் சென்ற மிக வெற்றிகரமான கேப்டனாக இருக்கிறார்.

- Advertisement -

தற்பொழுது 41 வயதை எட்டி இருக்கும் மகேந்திர சிங் தோனி, இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்பது பலரது எண்ணமாக இருந்து வருகிறது. அதே சமயத்தில் மகேந்திர சிங் தோனி தான் இந்த வருடத்துடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக எந்த இடத்திலும் அறிவிக்கவில்லை.

இன்னொரு பக்கத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஈடன் கார்டன் போட்டியின் போது அதிகப்படியான ரசிகர்கள் மஞ்சள் நிற ஜெர்சி உடன் வந்திருந்ததற்கு, இவர்கள் எனக்கு பேர்வெல் தர இப்படி வருகிறார்கள் என்று மகேந்திர சிங் தோனி கூறியிருந்தார்.

இந்த வகையில் பார்த்தால் மகேந்திர சிங் தோனி இந்த வருடத்துடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவார் என்கின்ற மாதிரி இருக்கிறது. இன்னொரு புறம் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவார் என்கின்ற உறுதியான பேச்சுகள் எதுவும் இல்லாமலும் இருக்கிறது. இதனால்தான் இந்த ஐபிஎல் தொடர் மகேந்திர சிங் தோனியை மையமாக வைத்துச் சுழன்று வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் மகேந்திர சிங் தோனியின் ஐபிஎல் ஓய்வு எப்படியானதாக இருக்கும்? என்று நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் தனது கருத்தை கூறியிருக்கிறார்.

இது பற்றி பேசி உள்ள அவர் ” தோனி ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் சூழ்நிலையை காதலிக்காவிட்டால் அவர் விளையாட மாட்டார் என்று நான் நினைக்கிறேன். அவர் இந்த சீசனோ இல்லை இன்னும் சில சீசன்களுக்கு பிறகோ ஓய்வு பெறுவார் என்றால் அதை அவர் முன்பே அறிவிப்பார். ஏனென்றால் நாடு முழுவதும் பிரியாவிடை தருவதற்கான தகுதியுள்ள மிகச்சிறந்த வீரர் அவர்.

மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த சேவகர். இது இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கும் மகேந்திர சிங் தோனியின் பங்களிப்புக்களுக்காக அனைவரும் தங்கள் பாராட்டுகளை தெரிவிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். எனவே தோனி தனது ஓய்வு முடிவை திடீரென்று அறிவிக்க மாட்டார். அறிவித்து விட்டே விளையாடுவார்!” என்று கூறியிருக்கிறார்!