“கவலையே படாதிங்க ஆஸிக்கு எதிரா சேப்பாக்கத்தில் அஸ்வின் இருப்பாரு.. காரணம் இதுதான்!” – பியூஸ் சாவ்லா இன்ட்ரஸ்டிங் அப்டேட்!

0
1252
Ashwin

இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் நாளை அசாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை சந்திக்கிறது!

இதற்கு அடுத்து இந்திய அணி அக்டோபர் மூன்றாம் தேதி திருவனந்தபுரம் மைதானத்தில் நெதர்லாந்து மணிக்கு எதிராக தனது இரண்டாவது மற்றும் கடைசி பயிற்சி போட்டியில் விளையாடுகிறது.

- Advertisement -

உலகக் கோப்பை போட்டிகள் அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்க இந்திய அணி தனது முதல் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அக்டோபர் எட்டாம் தேதி விளையாடுகிறது.

தற்பொழுது இறுதியாக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட உலகக் கோப்பை இந்திய அணியில் அக்சர் படேல் இடத்தில் பலரும் எதிர்பார்த்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்று இருக்கிறார்.

இதன் காரணமாக இந்திய அணியின் பலம் இன்னும் கொஞ்சம் அதிகரித்து இருக்கிறது. அஸ்வின் உடைய அனுபவம் மற்றும் திறமை இரண்டும் இந்திய ஆடுகளங்களில் வெகுவாக இந்திய அணிக்கு கை கொடுக்கும் ஒன்றாக இருக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் அவருக்கு நடக்க இருக்கும் உலகக் கோப்பையில் இந்திய அணியின் முதல் போட்டியான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சென்னையில் நடக்கும் போட்டியில் விளையாடும் அணியில் இடம் கிடைக்குமா? என்று பலரும் சந்தேகத்தில் இருக்கிறார்கள்.

இதற்கு பதில் அளித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா கூறும் பொழுது “அக்சர் படேல் காயம் அடைந்து அவர் உலகக் கோப்பைக்கு உடல் தகுதி பெறவில்லை என்பதை நாம் அறிவோம். அவருடைய இடத்தில் கடந்த கால சிறப்பான செயல்பாடுகளின் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளே வந்திருக்கிறார். அவரால் பேட்டிங் செய்ய முடியும் என்பதால் இது மிகச் சரியான தேர்வாக இருக்கும்.

அஸ்வின் ஒரு ஸ்ட்ரீட் ஸ்மார்ட் கிரிக்கெட்டர். அவர் சிறந்த வீரர். அவர் எந்த நேரத்தில் பந்து வீசினாலும் விளையாட்டைப் பற்றி அதிகம் சிந்திப்பார். அவர் எப்பொழுதும் விளையாட்டு உடன் இணைந்திருப்பார். அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு நாள் போட்டிகளில் அதிகம் விளையாடவில்லை என்றாலும் இதன் காரணமாகவே அணியில் இடம் பெற்றிருக்கிறார். அவர் நிச்சயம் அணிக்கு நல்லது செய்வார்.

அஸ்வின் விளையாடுவார் என்று யாரும் நினைக்கவில்லை. அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் நிச்சயம் விளையாடுவார். சென்னையில் எப்படி நிலைமை இருக்கும் என்று அவருக்கு மிக நன்றாக தெரியும். மேலும் இந்த நிலைமைகளை பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு கிரிக்கெட்டை அங்கு விளையாடி உள்ளார். எனவே அவர் நிச்சயம் விளையாடுவார்!” என்று கூறி இருக்கிறார்!