ஸ்ரேயாஸ் ஐயர் வேண்டாம்பா.. சாவ்லாவின் வித்தியாசமான இந்திய உலகக்கோப்பை அணி.. 20 வயது வீரருக்கு வாய்ப்பு

0
412

13-வது 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்க இருப்பதை முன்னிட்டு இந்திய அணியில் விளையாடும் வீரர்களை பற்றிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகரித்து இருக்கிறது . மேலும் இது தொடர்பாக முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் விமர்சிகர்களும் தங்களது 15 பேர் கொண்ட உலகக் கோப்பை இந்திய உத்தேச அணியை தேர்ந்தெடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்த லெக் ஸ்பின்னர் பியூஸ் சாவ்லா உலகக் கோப்பை இந்திய அணிக்கான 15 வீரர்களைக் கொண்ட தனது உத்தேச அணியை பதிவு செய்திருக்கிறார் . இவர் தேர்ந்தெடுத்து இருக்கும் அணி கிரிக்கெட் ரசிகர்களையும் விமர்சகர்களையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது .

- Advertisement -

இவரது அணியில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று இருக்கின்றனர். மேலும் மூன்று பிரதான வேகப்பந்துவீச்சாளர்களை தேர்ந்தெடுத்து இருக்கும் இவர் இந்திய அணியின் நான்காவது வீரராக களம் இறக்கப்படும் ஸ்ரேயாஸ் ஐயரை தனது அணியில் சேர்க்கவில்லை என்பதுதான் அனைவரையும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைய செய்திருக்கிறது.

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளிலும் ஐசிசி உலக சாம்பியன்ஷிப் தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம்பெறவில்லை . தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் தகுதி தேர்ச்சி பெற்றிருக்கும் அவர் ஆசிய கோப்பை காண இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார் . இந்திய அணிக்காக நான்காவது இடத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர். மேலும் இவர் 42 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 14 அரை சதங்கள் மற்றும் இரண்டு சதங்களுடன் 1631 கண்களை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் பியூஸ் சாவ்லா தேர்ந்தெடுத்து இருக்கும் அணியில் சூரியகுமார் யாதவ் இடம் பெற்று இருக்கிறார். மேலும் இந்திய அணியின் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான சஞ்சு சாம்சன் இந்த அணியில் இடம் பெறவில்லை. இவரது அணியில் ஆள் கவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா ரவீந்திர ஜடேஜா மற்றும் சார்துல் தாக்கூர் ஆகியோர் இடம் பெற்று இருக்கின்றனர் . ஆசிய கோப்பை அணியில் இடம் பெற்றிருக்கும் அக்சர் பட்டேல் பியூஸ்சா விழாவின் அணியில் இடம்பெறவில்லை .

- Advertisement -

ஆசிய கோப்பை அணியில் இடம்பெறாத யூஸ்வேந்திர சஹால் , குல்தீப் யாதவ் உடன் இரண்டாவது சுழற் பந்துவீச்சாளராக இடம் பெற்று இருக்கிறார். கேஎல் ராகுல் மற்றும் இசான் கிசான் ஆகியோர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக இவரது அணியில் இடம் பெற்று இருக்கின்றனர். முகமது சமி முகமது சிராஜ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் இந்த அணியில் பேட்ஸ்மேன்களாக கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலி கில் மற்றும் இளம் வீரர் திலக் வர்மா ஆகியோர் இடம் பெற்று இருக்கின்றனர். சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த திலக் வர்மாவை பியூஸ் சாவ்லா தனது அணியில் சேர்த்திருக்கிறார் .

பியூஸ் சாவ்லாவின் 15 பேர் கொண்ட இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.