விராட் கோலி வேண்டாம் – மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய கௌதம் காம்பீர்!

0
84
Virat kohli

தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பல காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அதில் மிக முக்கிய இரண்டு காரணங்கள் என்னவென்றால் ; சில காலமாக பேட்டிங் பார்ம் இல்லாமல் இருந்து வரும் விராட் கோலி இந்த ஆசிய கோப்பை தொடரில் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் திரும்பி வருவாரா என்றும், இந்திய அணியின் பேட்டிங் களவை எப்படி இருக்கும் என்றும் மிகப் பெரிய எதிர்பார்ப்பும் பேச்சும் இருந்தது.

பாகிஸ்தான் அணியுடன் இந்தியா மோதிய முதல் போட்டியில் இதற்கு ஓரளவு விடை கிடைத்தது, செய்யவந்த விராட் கோலி ஆரம்பத்தில் சிறிது தடுமாறினாலும் பின்பு சுதாரித்து பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அணி நிர்வாகத்திற்கு உண்மையான ஒரு மகிழ்ச்சியை தந்து இருக்காது. ஏனென்றால் அவர் ஒரு தேவையில்லாத ஷாட்டை விளையாடி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதே போட்டியில் பேட்டிங்கில் நம்பர் நான்காவது இடத்தில் சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக இடதுகை ஆட்டக்காரர் ரவிந்திர ஜடேஜா களமிறக்கப்பட்டார். சூரியகுமார் யாதவ் ஐந்தாம் இடத்திலேயே களமிறங்கினார். போட்டி வெற்றியில் முடிந்ததால் இந்த சோதனை எந்தவித விமர்சனத்திற்கும் உள்ளாகாமல் இருந்தது.

நேற்று ஹாங்காங் அணியுடன் இந்திய அணி மோதிய போட்டியில், விராட் கோலி வழக்கம்போல் பேட்டிங்கில் நம்பர் மூன்றாம் இடத்தில் வந்து 45 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு பவுண்டரி 3 சிக்சர்கள் அடக்கம். இது அவரது பழைய ஆட்டத்தில் அவர் ஓரளவுக்கு திரும்பி வந்துவிட்டார் என்று கூறும்படி இருந்தது.

ஆனால் விராட் கோலியும் கே எல் ராகுலும் சேர்ந்து விளையாடிய பொழுது பெரிய அளவில் ரன்கள் வரவில்லை. கேஎல் ராகுல் ஆட்டமிழந்த 13வது ஓவரின் போது இந்திய அணி 94 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.

- Advertisement -

ஆனால் இதற்குப் பிறகு சூரியகுமார் களத்திற்கு வந்த பிறகு இந்திய அணியின் ஸ்கோர் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. அடுத்த ஏழு ஓவர்களில் விராட் கோலி சூர்யகுமார் யாதவ் ஜோடி 98 ரன்கள் குவித்தது. இதில் சூரியகுமார் வெறும் 26 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர்கள் 68 ரன்கள் குவித்து மிரட்டினார். விராட் கோலி வழக்கம்போல தன் இயல்பான விளையாட்டால் அவருக்கு நல்ல ஒத்துழைப்பை தந்தார். இந்தப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் நான்காவது இடத்தில் வந்தது அணி சீக்கிரம் பெரிய ரன்களை எட்ட உதவியது.

தற்போது இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பிரபல வீரர் கௌதம் காம்பீர் கூறும்பொழுது ” ஒரு வீரருக்கு எந்த இடத்தில் விளையாட வேண்டும் என்பது முக்கியம் இல்லை. அவர் அணிக்கு எந்த இடத்தில் விளையாட வேண்டும் என்பதுதான் முக்கியம். சூர்யகுமார் யாதவ் போல் நல்ல ஃபார்மில் ஒரு வீரர் இருந்தால் அந்த வீரரின் ஃபார்மை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால் அவரை முன்பே களமிறக்க வேண்டும். விராட் கோலியை நம்பர் நான்கிலும் ஹர்திக் பாண்டியாவை நம்பர் ஐந்திலும் களமிறக்க வேண்டும் ” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஒரு தொடக்க ஆட்டக்காரர் சீக்கிரத்தில் விக்கெட்டை இழந்தால், உடனே உள்ளே வந்து அதிரடியான விளையாட்டின் மூலம் அந்த சூழ்நிலையை மாற்றும் திறமை கொண்டவர் சூர்யகுமார் யாதவ். அவரை இந்த இடத்திற்கு தான் என்று வைத்து இருப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. குமார் யாதவ் ஒரு பிளாஸ்டர்” என்று தெரிவித்தார்!