“டிராவிட் தப்பா நினைக்காதிங்க.. இந்திய டீம்ல இதை மட்டும் ஒழிச்சிடுங்க.. உலக கோப்பை உங்களுக்குதான்!” – லாரா ஓபன் அட்வைஸ்!

0
861
Dravid

பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி மூலமாக குஜராத் அகமதாபாத் மைதானத்தில் தொடங்கி இருக்கிறது!

ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக மைதானத்தில் ரசிகர்களின் வரவேற்பு மிகவும் குறைவாக இருக்கிறது. 40,000 டிக்கெட்டுகள் பெண்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், மைதானத்தில் மொத்தமாக 4 ஆயிரம் பேர் கூட இல்லை என்பதுதான் உண்மை நிலையாக இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் தொடர்ந்து இந்தியா விளையாடாத மற்ற போட்டிகளுக்கு ரசிகர்களின் ஆதரவு உலகக் கோப்பையில் கிடைக்குமா? என்பது தற்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் கிடைக்கும் வரவேற்பு ஒருநாள் கிரிக்கெட்டின் தலையெழுத்தையும் தீர்மானிப்பதாக அமையலாம் என்பதால், இது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டை சேர்ந்த லெஜெண்ட் பேட்ஸ்மேன் பிரையன் லாரா இந்திய அணி நிர்வாகத்திற்கும் மற்றும் ராகுல் டிராவீட்டுக்கும் முக்கியமான ஒரு அறிவுரையை கூறியிருக்கிறார். அதில் அவர் சில முக்கியமான விஷயங்களை வெளிப்படையாகவே பேசி இருக்கிறார்.

இதுகுறித்து லாரா கூறும்பொழுது “ஆறு வார கொண்டாட்டங்களை எதிர்பார்க்கலாம். நிறைய இதயத்துடிப்புகள் மற்றும் ஏமாற்றங்களும் இருக்கும். இந்தியாவுடன் சேர்த்து இங்கிலாந்து உலக கோப்பையை வெல்லக்கூடிய அணியாக இருக்கும். என் நண்பர் ராகுல் டிராவிட்டுக்கு சொல்ல என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது. நீங்கள் வெளியே சென்று விளையாடி வெல்லுங்கள்.

- Advertisement -

நான் இந்திய அணிக்கு கூறும் அறிவுரை என்னவென்றால், இந்திய அணியின் ஒன்று இரண்டு நட்சத்திர பேட்ஸ்மேன்கள் உலகக் கோப்பை தொடரை வெல்வார்கள் என்கின்ற தோற்றத்தை கருத்தை ஒழிக்க வேண்டும் என்று டிராவிட்டை கேட்டுக்கொள்கிறேன். இதை அவர்கள் சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை உயர்த்துவார்கள் என்று நினைக்கிறேன். கிரிக்கெட் அதன் கணிக்க முடியாத தன்மைக்கு பெயர் பெற்றது. இப்படியான ஒரு பெரிய தொடரில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்!” என்று கூறியிருக்கிறார்!