ரோகித் வாயில வந்ததை பேசாதிங்க.. 2007 சச்சினுக்கு நடந்ததை நினைச்சு பாருங்க – இந்திய முன்னாள் வீரர் கடுமையான தாக்கு!

0
952
Rohit

இந்த மாதம் 30 ஆம் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளில் நடைபெறும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான மற்ற அணி நிர்வாகங்கள் தங்களுடைய அணிகளை ஏற்கனவே அறிவித்து விட்டன.

இந்திய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்து நடக்க இருப்பதால் ஆசியக் கோப்பை தொடர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனவே இதற்கான இந்திய அணி அறிவிப்பு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

நேற்றைய அணி அறிவிப்புக்கு அடுத்து கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

இந்த நிகழ்வில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நம்பர் நான்காம் இடத்தில் யார் விளையாடுவார்கள் என்பது குறித்தான பேச்சின் போது “அணியின் ஆறு முதல் ஏழு வீரர்கள் எல்லா இடங்களிலும் விளையாடுவதற்கு ஏற்றார் போல் தயாராக இருக்க வேண்டும். இதை நாங்கள் இப்பொழுது சொல்லவில்லை இரண்டு மூன்று வருடங்களாகவே சொல்லி வருகிறோம். அணி அந்த அளவிற்கு நெகிழ்வுத்தன்மையோடு இருக்க வேண்டும்!” என்பதாக கூறியிருந்தார்.

மேலும் விராட் கோலியை நம்பர் நான்காம் இடத்தில் விளையாட வைப்பதற்கான யோசனைகள் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் விராட் கோலியை தேவைப்பட்டால் நான்காவது இடத்தில் அனுப்ப வேண்டும் என்றும் பேசி வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் தொட்ட கணேஷ் ரோஹித் சர்மாவின் பேச்சுக்கு தனது கடுமையான கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது “உலகின் சிறந்த பேட்டர் தன்னுடைய வழக்கமான இடத்தில்தான் பேட்டிங் செய்ய வேண்டும். அங்கு அவர் நிறைய வெற்றிகளை பெற்றிருக்கிறார். இதுவரை நான்காவது இடத்திற்கான ஒரு வீரரை கண்டுபிடிக்காமல் இருந்துவிட்டு விராட் கோலியை அந்த இடத்தில் போய் விளையாட சொல்வது தவறு. 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கரை நான்காவது இடத்தில் விளையாட சொன்னதால் என்ன நடந்தது என்று நினைத்துப் பாருங்கள்.

2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளிடம் தோல்வி அடைந்து முதல் சுற்றோடு அந்த உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. அந்தப் பெரிய தொடரில் சச்சின் டெண்டுல்கர் நான்காவது இடத்தில்தான் பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டார்!” என்று கூறியிருக்கிறார்.