“இந்த அரைகுறை வீரரை மட்டும் இந்தியாவின் ஆடும் 11-ல் எடுக்காதீங்க” – கம்பீர் ஆசிய கோப்பை போட்டிக்கு முன்பாக பேட்டி.!

0
5283

ஆஷிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த இரண்டு ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. பாகிஸ்தான் அணி நேபாளம் அணியையும் இலங்கை அணி பங்களாதேஷ் அணையையும் வெற்றி பெற்று இருக்கிறது.

இந்நிலையில் கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை இலங்கையில் உள்ள கண்டி நகரில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியை பற்றி எதிர்பார்ப்பு தற்போது இருந்தே ரசிகர்களிடம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

- Advertisement -

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி டி20 உலக கோப்பையில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி பரபரப்பான வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு இரண்டு அணிகளும் மீண்டும் மோத இருக்கின்றன.

இந்தப் போட்டி தொடர்பாக பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் முன்னால் வீரர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற கௌதம் கம்பீர் இந்திய அணி தொடர்பாக தனது கருத்துக்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பதிவு செய்து இருக்கிறார் . இந்திய அணி தொடர்பாக பேசியிருக்கும் அவர் பேட்டிங்கை மனதில் வைத்துக் கொண்டு முக்கியமான பந்துவீச்சாளர்களில் ஒருவரை நீக்கினால் அது இந்திய அணிக்கு பாதகமாக தான் அமையும் என தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து விளக்கமாக பேசியிருக்கும் கம்பீர்” நான் மூன்று பிரதான வேகப்பந்து வீச்சாளர்களுடன் தான் களமிறங்குவேன். ஆசிய கோப்பையில் மட்டுமல்ல நடைபெற இருக்கும் உலக கோப்பையிலும் மூன்று முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவேன். எட்டாவது இடத்தில் பேட்டிங் பலமாக இருக்க வேண்டும் என்று பந்துவீச்சு ஆல் ரவுண்டர் சர்துல் தாக்கூரை அணியில் எடுத்தால் அது மிகப் பெரிய தவறாக அமைந்து விடும்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” முகமது சமி முகமது சிராஜ் மற்றும் பும்ரா இந்த மூன்று வீரர்களும் தங்களது 10 ஓவரில் உங்களுக்கு போட்டியை வென்று கொடுக்கும் திறமை மிக்கவர்கள். சர்துல் தாக்கூரை முழுமையாக பேட்ஸ்மனாகவும் எடுத்துக் கொள்ள முடியாது. பந்து வீச்சிலும் அவரை ஹர்திக் பாண்டியா உடன் சேர்த்து மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார். அவர் பந்துவீச்சில் விக்கெட்டுகளை எடுத்தாலும் அதிகமாக ரண்களை விட்டுக் கொடுக்கிறார். மேலும் பேட்டிங்கில் உறுதியாக நம்ப முடியாத ஒரு வீரராக இருக்கிறார். எனவே அவரை நம்பி களத்தில் இறங்குவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

போட்டிகளை அனுப்பும் விதம் குறித்து பேசிய அவர் ” நீங்கள் சேஸ் செய்ய வேண்டிய இலக்கு 250 அல்லது 325 என்பதில் தெளிவாக இருங்கள். எட்டு பேட்ஸ்மேன்களுடன் சென்றால் 325 ரன்களை சேஸ் செய்ய வேண்டும். அது பேட்ஸ்மேன்களின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்” என தெரிவித்திருக்கிறார். மேலும் நாம் பேட்டிங் வரிசையை பலப்படுத்த வேண்டும் என்று தான் நினைக்கிறோம் ஆனால் பந்துவீச்சு யூனிட் பலமாக இருக்கும் அணிகள் தான் உலகக்கோப்பை வெற்றி பெற்றிருக்கின்றன. உங்களது பந்துவீச்சுக் கூட்டணி வலிமையாக இருந்தால் அது பேட்ஸ்மேன்களின் மீதான அழுத்தத்தை குறைக்கும் என தெரிவித்திருக்கிறார்.