“இந்த சிஎஸ்கே வீரரை ஒரு நாள் மற்றும் டி20 இந்திய அணியில் எடுக்க வேண்டாம்” – ஆகாஷ் சோப்ரா சர்ச்சை கருத்து!

0
832

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் அஜின்கிரகானே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார் . அந்தப் போட்டி தொடரின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் .

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 89 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 46 ரன்களையும் எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் டெஸ்ட் துணை கேப்டனாக இருந்த புஜாரா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் அணியில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் அஜிங்கிய ரகானே மீண்டும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் .

- Advertisement -

இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ரகானே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் . இந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய ரகானே 326 ரன்கள் எடுத்திருக்கிறார் . இதில் இரண்டு அரை சதங்கள் அடங்கும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 176.49. எல்லா போட்டிகளிலும் சிஎஸ்கே அணிக்கு நல்ல ஒரு அதிரடி ஆட்டத்தை கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் அஜிங்கியா ரகானே ஐபிஎல் தொடரில் விளையாடியதை வைத்து அவரை இந்தியாவின் ஒரு நாள் மற்றும் டி20 அணிகளுக்கு தேர்வு செய்ய கூடாது என தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் உன்னால் வீரர் ஆகாஷ் சோப்ரா . இது குறித்து பேசி இருக்கும் அவர் சிஎஸ்கே அணிக்கு சிறப்பாக விளையாடியது மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் நன்றாக விளையாடியதால் அவர் டெஸ்ட் அணியில் இடம் பெற்றார் . மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கினார் . அதற்காக அவரை ஒரு நாள் மட்டும் அணிகளில் எடுப்பது சரியாக இருக்காது என்று தெரிவித்திருக்கிறார் .

மேலும் இது குறித்து தொடர்ந்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா ‘ அஜிங்கியா ரகானே இந்த வருட ஐபிஎல் இல் சிறப்பாக விளையாடினார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை . அதே நேரம் நாம் இந்தியாவின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறிய கருத்தையும் யோசித்துப் பார்க்க வேண்டும் . 18 மாதங்கள் அணியில் விளையாடாத ஒரு வீரர் அணிக்கு திரும்பியவுடன் அவருக்கு துணை கேப்டன் பதவியை கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்வி எழுப்பினார் .

- Advertisement -

இதனைத் தொடர்ந்து பேசிய அவர் ” அஜிங்கியா ரகானே இந்த தொடரில் அதிவேக அரை சதத்தை அடித்தார் என்பது மறுக்க முடியாது. மேலும் அதன் பிறகு ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடினார் . இந்த இரண்டு ஆட்டங்களையும் தவிர அவர் சொல்லிக் கொள்ளும் படியாக வேறு எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை . வந்து மெதுவாக திரும்பி வரக்கூடிய சென்னை போன்ற ஆடுகளங்களில் அவர் தடுமாறினார் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது . என்றும் முன்னேறிச் செல்லத்தான் பார்க்க வேண்டுமே தவிர பின்னோக்கி செல்வது என்பது சரியான அணுகுமுறை இல்லை . தற்போது இருக்கும் இந்திய அணியில் பேட்டிங் பொசிஷனிலும் காலியிடங்கள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது . அதனால் ஒரு நாள் மற்றும் t20 போட்டிகளில் அவரை சேர்ப்பது சரியாக வராது இதுதான் என்னுடைய கருத்து” என்று தெரிவித்திருக்கிறார்