“பேட்ஸ்மேனை பாத்து சிரிக்காதீங்க” – பீட்டர்சன் தென் ஆப்பிரிக்க பவுலருக்கு அறிவுரை

0
3208
Burger

இன்று இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொண்ட பாக்சிங் டே டெஸ்டில் மழை குறுக்கீட்டின் காரணமாக இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருக்கிறது.

இன்று வெல்ல வேண்டிய அவசியம் இருந்த நிலையில், டாஸ் தோற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது கொஞ்சம் பின்னடைவாக அமைந்தது. தொடர்ச்சியாக வேகப்பந்துவீச்சுக்கு ஆடுகளம் சாதகமாகவே இருந்தது.

- Advertisement -

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஐந்து ரன்களில் ரபடா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதற்குப் பிறகு இந்திய அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்து கொண்டே இருந்தது.

இளம் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மற்றும் மூன்றாவது இடத்தில் புதிதாக வந்து விளையாடும் இளம் வீரர் கில் இருவரது விக்கெட்டையும் இளம் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளரான நன்ட்ரே பர்கர் வீழ்த்தினார்.

ஜெய்ஸ்வாலுக்கு பந்தை உள்ளே வெளியே என்று நகர்த்திக் கொண்டே இருந்துவிட்டு, கவர் பீல்டரை எடுத்து ஸ்லிப்பில் வைத்து, கவர் டிரைவ் அடிப்பதற்கு வேண்டுமென்றே பந்தை ஃபுல் லெந்தில் வீசி, எட்ஜ் எடுக்க வைத்து விக்கெட் கீப்பர் மூலம் அவுட் செய்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து கில்லுக்கு பந்தை வேகமாக லெக் ஸ்டெம்பில் வைத்து, லெக் கிளான்ஸ் ஆட வாய்ப்பு கொடுத்து, அவரையும் விக்கெட் கீப்பர் மூலம் ஒரு ரன்னில் வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் சரிவுக்கு ரபாடா பொறுப்பு எடுத்துக்கொண்டு, மேலும் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி மொத்தமாக ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.

இந்த நிலையில் இளம் வேகபந்துவீச்சாளர் நன்ட்ரே பர்கருக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் அறிவுரை கூறும் பொழுது ” எனக்கு பர்கரின் பந்துவீச்சும் அவரது அதி வேகமும் பிடிக்கும். அவரிடம் நான் மேலும் எதிர்பார்ப்பது என்னவென்றால், அவர் பேட்ஸ்மேன்களை பார்த்து சிரிக்காமல் இன்னும் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை பந்தை வீசி விட்டு பேட்ஸ்மேன்களை பார்த்து சிரிப்பது, பேட்ஸ்மேன்களுக்கு ஒரு சிறிய வெற்றியை கொடுக்கும். நல்ல வேகத்தில் வீசுங்கள், ஆனால் ஒவ்வொரு முறையும் சிரிக்காமல் தீவிரத்தோடு ஆக்ரோஷமாக இருங்கள்!” என்று கூறி இருக்கிறார்!