இந்த தடவை மிஸ் ஆகாது.. அயர்லாந்துக்கு எதிரான மாஸ் டி20 உத்தேச இந்திய பிளேயிங் XI

0
1367
Bumrah

தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-3 என இழந்து அதிர்ச்சி அளித்து இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது இந்த அணியில் இருந்து சுப்மன் கில், இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், கேப்டன் ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சகல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, காயத்திலிருந்து திரும்பும் பும்ரா தலைமையில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அயர்லாந்து அணிக்கு எதிராக இந்தியா விளையாட இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், வருகின்ற 18ஆம் தேதி ஆரம்பித்து 20 மற்றும் 23ஆம் தேதிகளில் நடைபெற்று முடிவடைகிறது. இந்த மூன்று போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7:30க்கு துவங்குகிறது.

இந்த அணிக்கு கேப்டனாக பும்ராவும், துணை கேப்டனாக ருதுராஜும் இருக்கிறார்கள். விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ஜிதேஷ் ஷர்மா வருகிறார்கள். மேலும் ஐபிஎல் தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் ரிங்கு சிங்குக்கு முதல் வாய்ப்பு இந்திய அணிக்குள் தரப்பட்டிருக்கிறது.

அயர்லாந்து டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி :

- Advertisement -

ஜஸ்பிரிட் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, ஷாபாஷ் அகமத், ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான்.

தற்பொழுது ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருக்கும் நிலையில், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனவே இந்த தொடருக்கான ஒரு வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் இங்கு பார்ப்போம்.

துவக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் மற்றும் ஜெய்ஸ்வால்.
மூன்றாவது நான்காவது இடம் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா.
ஐந்தாவது மற்றும் ஆறாவது இடம்
சிவம் துபே மற்றும் ரிங்கு சிங்.
ஏழாவது மற்றும் எட்டாவது இடம் சபாஷ் அகமத் மற்றும் வாஷிங்டன் சுந்தர்.
மீதமுள்ள மூன்று இடங்கள் பும்ரா, அர்ஸ்தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா.

இந்த அணியில் மொத்தம் ஆறு ஏழு பேருக்கு மேல் பந்து வீசும் வாய்ப்பில் இருப்பார்கள். மிக முக்கியமாக இந்த அணியில் எட்டு பேர் பேட்டிங் செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்ய ஆள் இல்லாத காரணத்தால்தான் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடரை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது!