“சிரிப்பு கட்டாம போங்க சார்” – மைக்கேல் வாகனுக்கு அஷ்வின் தந்த தரமான பதிலடி!

0
320
Ashwin

இந்திய அணி இந்தமுறை தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட மூன்று கேப்டன்களின் தலைமையில் பயணம் செய்தது.

இதில் மூன்றாவதாக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி சந்தித்து விளையாடியது.

- Advertisement -

இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் மிகுந்த தடுமாற்றத்தை சந்தித்தது. மேலும் பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பதாக தெரிந்த ஆடுகளத்தில், இந்திய பந்துவீச்சாளர்கள் 400க்கும் மேற்பட்ட ரன்களை தென் ஆப்பிரிக்காவுக்கு கொடுத்தனர்.

இதன் காரணமாக இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் முதல் டெஸ்ட்டை தோற்று, தென் ஆப்பிரிக்கா மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்த முறையும் தவறவிட்டது.

இந்த நேரத்தில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்திய அணியை சாதனைகள் செய்யாத அணி என்பதாக கூறி விமர்சனம் செய்திருந்தார். அது அப்போது பலராலும் இந்திய தரப்பில் எதிர் விமர்சனம் செய்யப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் திரும்பி வந்ததோடு மொத்த போட்டியையும் ஒன்றரை நாட்களில் முடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் கேப் டவுன் மைதானத்தில் டெஸ்ட் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்கின்ற சாதனையையும் இந்திய அணி படைத்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனின் இந்திய அணி பற்றிய கருத்துக்கு, இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய பாணியில் தரமான பதிலடி ஒன்றை தந்திருக்கிறார்.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “முதல் டெஸ்ட் தோல்விக்கு பிறகு மைக்கேல் வாகன் இந்திய அணியை சாதனையில்லாத அணி என்று கூறினார். ஆமாம் நாங்கள் எங்களை கிரிக்கெட்டின் பவர் ஹவுஸ் என்று சொல்லிக் கொள்கிறோம். நாங்கள் சில பல வருடங்களாக ஐசிசி தொடர்களை வெல்லவில்லை.

ஆனால் இந்திய டெஸ்ட் அணி எப்பொழுதும் வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது சில காலமாக தொடர்ந்து மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாங்கள் வெளியில் பல சிறந்த டெஸ்ட் வெற்றிகளை பெற்றிருக்கிறோம். மைக்கேல் வாகன் இப்படி கூறிய பிறகு இந்திய தரப்பில் இருந்து நிறைய எதிர் விமர்சனங்கள் வந்தது. ஆனால் எனக்கு அந்த கருத்துக்கு சிரிப்புதான் வந்தது” என்று கூறி இருக்கிறார்!