“ரோகித் விளம்பரத்துக்கு ஆள் வைக்கல.. தானே உழைச்சி தலைவரா மாறி இருக்காரு!” – கவுதம் கம்பீர் உள்குத்து பரபரப்பு பாராட்டு!

0
1781
Rohit

இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஐந்தையும் வென்று அரை இறுதி வாய்ப்பில் முன்னணியில் இருக்கிறது.

இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் கேப்டன் ரோஹித் சர்மா சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் மிகவும் அதிரடியான துவக்கம் தருவது, இந்திய அணியில் மற்ற பேட்ஸ்மேன்கள் இயல்பாக விளையாடுவதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது.

- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் சார்பில் அதிக ரன் அடித்த வீரராக ரோகித் சர்மா தற்பொழுது மாறி இருக்கிறார். மேலும் தற்போது உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர் அடித்த பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா இருக்கிறார்.

ரோஹித் சர்மாவின் இந்த அணுகுமுறை முற்றிலும் அவருடைய இயல்புக்கு மாறாக இருக்கிறது. அவர் எப்பொழுதுமே ஆரம்பத்தில் கொஞ்சம் பந்துகளை எடுத்துக்கொண்டு அதற்குப் பிறகு அதிரடியாக விளையாட கூடியவர். தற்பொழுது அணியினர் எல்லோரும் தைரியமாக விளையாட வேண்டும் என அவரும் அப்படியே விளையாடுகிறார்.

இதுகுறித்து கம்பீர் கூறும் பொழுது “ரோகித் சர்மா தன்னலமற்ற ஒரு கேப்டன். அவர் பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் அணியிடம் என்ன எதிர்பார்க்கிறாரோ அதை அவரே முதலில் செய்கிறார். உங்கள் அணி பாசிட்டிவாக பேட்டிங் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் முதலில் பாசிட்டிவாக பேட்டிங் செய்ய வேண்டும்.

- Advertisement -

விளம்பரத்திற்கு ஆள் வைப்பது முன்னணியில் இருப்பதற்கு உதவாது. மாறாக ரோகித் சர்மா மாதிரி தானே முன்னுதாரணமாக மாறி முன்னால் இருந்து விளையாடினால் மட்டும்தான் முடியும்.

இந்த உலகக் கோப்பையில் அவர் இதை செய்து வருகிறார். அவர் அதிக ரன்கள் அடித்தவர்களில் எத்தனை இடத்தில் இருக்கிறார் என்று தெரியாது. ஆனால் நவம்பர் 19ஆம் தேதி உலகக் கோப்பையை வெல்வதுதான் முக்கியம்.

சதம் அடிப்பதா உலகக் கோப்பையை வெல்வதா என்று நீங்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும். சதம் அடிப்பது என்றால் நீங்கள் அதற்கேற்றவாறு விளையாட வேண்டும்.

ஆனால் ரோகித் சர்மா ஒரு தன்னலமற்ற கேப்டன். அவர் தற்பொழுது பேட்டிங் செய்யும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அவர் இந்த உலகக் கோப்பையில் இதை தொடர்ந்து செய்வார் என்று நான் நம்புகிறேன்.

ரோகித் சர்மாவால் 40 இல்லை 45 சதங்கள் அடித்து இருக்க முடியும். ஆனால் அவருக்கு புள்ளி விவரங்கள் மீது வெறித்தனம் கிடையாது. அவர் தான் விளையாடும் விதத்தைக் கொண்டு தான் யார் என்று காட்டுகிறார். அதைத்தான் ஒரு தலைவர் செய்ய வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்.