“கால் நடுக்கத்தோட உலக கோப்பைக்கு போகாதிங்க!” – ரோகித் டிராவிட்டுக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

0
662
Ravi

விராட் கோலிக்கு பிறகு கேப்டனாக வந்த ரோஹித் சர்மாவுக்கு மூன்று வடிவங்களிலும் மூன்று உலகக்கோப்பைகளுக்கு கேப்டனாக இருப்பதற்கான வாய்ப்பு அமைந்தது!

இதில் டி20 உலகக்கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டையும் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி தோற்று இழந்து இருக்கிறது. தற்பொழுது இவர்கள் கைகளில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கான உலகக்கோப்பை இருக்கிறது!

- Advertisement -

இறுதியாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் தவறான முறையில் அணித்தேர்வை அமைத்ததால் தோல்வி அடைய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

இந்தியாவில் வைத்து அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை இந்திய அணி நிர்வாகம் எப்படி அணுக வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பெயர்ச்சியாளர் ரவி சாஸ்திரி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டுக்கு சில அறிவுரைகளைக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“முதலாவதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடந்த தவறை மனதில் வைத்து முழங்கால் நடுக்கத்தோடு உலகக் கோப்பைக்கு போகக்கூடாது. அது வேறு வடிவம். தற்பொழுது இது வேறு வடிவம். இந்தியாவில் உலகக்கோப்பை நடக்கிறது எனவே உலகக்கோப்பை வெல்லும் அணியில் இந்தியாவும் ஒன்று.

- Advertisement -

இப்போது உங்களுக்குச் சொல்கிறேன் இந்தியாவால் இந்த உலகக் கோப்பையை வெல்ல முடியும். இதற்கு சரியான இளமையும் அனுபவமும் கொண்ட அணி தேவை. இப்பொழுது இப்படியான அணியைக் கொண்டு வருவதற்கான நேரமும் கொஞ்சம் இருக்கிறது. இப்படி நீங்கள் உங்களுடைய முழு பலத்தை பெற்றால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவோடு இந்தியாவும் போட்டியில் இருக்கும்.

இந்திய அணியை சோக்கர்ஸ் என்று நான் சொல்ல மாட்டேன். இந்த உலகக்கோப்பைக்கான வாய்ப்பில் இருக்கும் இரண்டு அணிகளோடும் நாங்கள் மற்ற கிரிக்கெட் வடிவத்தின் உலகக்கோப்பை நாக்கவுட் போட்டிகளில் விளையாட்டு இருக்கிறோம். ஒன்றில் அரை இறுதி மற்றொன்று இறுதிப்போட்டி.

ஆனால் எங்களால் அதை வெல்ல முடியவில்லை. பெரிய போட்டிகளை வெல்ல வேண்டும் என்றால் ஒருங்கிணைந்த முயற்சியும் செயல்பாடும் தேவை. இதற்காக நீங்கள் ஒரு தனி நபரை இல்லை கேப்டனை குறை சொல்ல முடியாது.

இப்படியான பெரிய போட்டிகளில் உங்களுக்கு பேட்ஸ்மேன்களிடமிருந்து சதம் தேவை. பிறகு பந்துவீச்சாளர்கள் அந்த ரன்களை வைத்துக் கொண்டு வெற்றிக்கான வாய்ப்பை உருவாக்கும் பொழுது கோப்பையை வெல்ல முடியும். நீங்கள் சதம் அடிக்கவில்லை என்றாலும் கூட அணியில் மூன்று நபர்கள் அரை சதங்களை அடிக்க வேண்டும். இதுவெல்லாம் நடந்தால்தான் கிரிக்கெட்டில் எந்த வடிவத்திலும் உலகக் கோப்பைகளை வெல்ல முடியும்!” என்று கூறியிருக்கிறார்!