“வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு சம்பள காண்ட்ராக்ட் குடுக்காதிங்க; நான் சொல்றத பண்ணுங்க வேற லெவல்ல விளையாடுவாங்க” – சுனில் கவாஸ்கர் மாஸ் ஐடியா!

0
2159
Gavaskar

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது தனது உள்நாட்டில் இந்திய அணியை எதிர்த்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது!

இதில் முதலில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தொடரில் பின்தங்கி இருக்கிறது.

- Advertisement -

நடைபெற்ற முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் யூனிட் இந்திய பௌலிங் யூனிட் இருக்கு எதிராக எந்த ஒரு போராட்ட குணத்தையும் வெளிப்படுத்தாமல் அப்படியே சரணடைந்தது. அஸ்வின் மொத்தமாக 12 விக்கெட் அள்ளினார்.

பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை விட ஓரளவுக்கு நன்றாக இருந்தது. ஆனால் அவர்கள் மிகக் கடுமையாக போராடி இந்தியா பேட்ஸ்மேன்களை தடுக்காமல் விட்டு விட்டார்கள்.

- Advertisement -

தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிக ஊக்கமாக செயல்படுவதற்கு இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஒரு வித்தியாசமான யோசனையை முன் வைத்திருக்கிறார். அதாவது அவர்களுக்கு தரப்படும் சம்பளத்தை மாற்றி தர வேண்டும் என்று ஒரு யோசனையை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“எனது முதல் சுற்றுப் பயணத்திற்கு நான் அங்கு சென்றேன். அங்கு நான் நிறைய பேரை அறிவேன். அந்த அற்புதமான கிரிக்கெட் வீரர்கள் விட்டுச் சென்ற பாரம்பரியம் என்னவென்று எனக்குத் தெரியும். அங்கே ஒரு அழகான அமைதியான சுபாவம் இருக்கிறது. ஆனால் விளையாட வரும் பொழுது ஒரு மாதிரி நிதானமாக இருக்கிறது. இப்படி இருப்பதால் நல்ல ரிசல்ட்டை பெற முடியாது.

இன்று வெஸ்ட் இண்டீஸ்காக எந்த கிரிக்கெட் வடிவத்தில் விளையாடினாலும், உலகம் முழுவதிலும் எந்த வீரர்களுக்கும் ஒரு சம்பளம் என்று நிரந்தரமாக தரப்படுகிறது. இப்படி இருக்கும் பொழுது அவர்கள் என்ன ரன் அடிக்கிறார்கள் எவ்வளவு விக்கெட் எடுக்கிறார்கள் என்பது பற்றி எந்த கவலையும் இல்லாமல் போய்விடுகிறது.

அவர்களுடைய சுபாவத்தை புரிந்து கொண்டால் நமக்கு இதற்கு ஒரு மாற்றை கொண்டு வர முடியும். இவர்களுக்கு சம்பளத்திற்கான சென்ட்ரல் காண்ட்ராக்டை தரக்கூடாது. இதற்கு பதிலாக இவர்களுக்கு ஒரு போட்டிக்கு வழங்கப்படும் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் இவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் ஊக்கமாக செயல்படுவதற்கு உதவியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

ஆண்டுக்கு இவ்வளவு சம்பளம் என்பது இல்லாமல் ஒரு போட்டிக்கு இவ்வளவு சம்பளம் என்று, தற்போது உள்ள போட்டி சம்பளத்தை விட அதிக சம்பளத்தை கொடுப்பதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஒரு போட்டிக்கு தரும் முக்கியத்துவத்தை இன்னும் அதிகரிக்க முடியும் என்று கவாஸ்கர் நம்புகிறார்!

- Advertisement -