“ஆப்கான்கிட்ட அடி வாங்கிடாதிங்க.. பாபர் பெரிய டீம் கூட அடிக்க முடியும்னு காட்டு!” – சோயப் அக்தர் பாகிஸ்தான் அணிக்கு உருக்கமான வேண்டுகோள்!

0
4133
Akthar

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெறும் நான்கு அணிகளில் பாகிஸ்தான் அணியும் ஒன்று என பலரும் கணித்திருந்தார்கள்.

ஆனால் ஆசிய கோப்பைக்கு வந்து பாகிஸ்தான் விளையாடிய விதத்தை பார்த்த பிறகு அந்த கருத்து வெகுவாக பலருக்கு மாறி இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் பலவீனங்கள் நிறைய பகுதிகளில் அணியில் இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது உலகக் கோப்பையில் விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டு சிறிய அணிகளிடம் வென்று இரண்டு பெரிய அணிகளிடம் தோல்வி அடைந்து இருக்கிறது.

இனி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு வர வேண்டும் என்றால் அந்த அணி தான் சந்திக்கும் பெரிய அணிகளுடன் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். மேலும் சிறிய அணிகளிடமும் வெற்றி பெற வேண்டும் என்பது தனி.

இந்த நிலையில் நாளை சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான சென்னை மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாட இருக்கிறது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான அணி சுழற் பந்துவீச்சில் மிகவும் திறமையான பந்துவீச்சாளர்களை வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரணத்தினாலே ஆப்கானிஸ்தான் அணியுடன் சென்னை மைதானத்தில் விளையாட மாட்டோம் என்று உலகக் கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தான் அடம் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இந்த போட்டி குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேத பந்துவீச்சாளர் சோயப் அக்தர் கூறும் பொழுது “ஆப்கானிஸ்தான் பலம் வாய்ந்த அணி. நீங்கள் பெரிய தர்ம சங்கடத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்றால், ஆப்கானிஸ்தான அணியை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

போட்டி நடக்கும் சென்னை மைதானத்தில் பந்து நன்றாக திரும்பும். இது ஆப்கானிஸ்தானுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை. அவர்கள் அணியில் நல்ல சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். தயவுசெய்து சிறப்பான முறையில் விளையாடுங்கள்.

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும் என்று கிடையாது. 320 ரன்கள் எடுத்து பந்துவீச்சாளர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன். சிறந்த பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக ரன் கொண்டு வர வேண்டும். மேலும் அவர் பெரிய அணிகளுக்கு எதிராக ரன்கள் அடிக்க முடியும்!” என்று காட்ட வேண்டும் என்று கூறி இருக்கிறார்!