ஐந்து சிக்ஸ் அடிச்சப்பவே யோசிக்கல; இந்த கடைசி பந்துக்கு மட்டுமா யோசிக்க போறேன் – கொல்கத்தா ஹீரோ ரிங்கு சிங்!

0
11690
Rinku

இன்று பிளே ஆப் சுற்று வாய்ப்புக்கான முக்கியமான ஆட்டத்தில் கொல்கத்தா மைதானத்தில் கொல்கத்தா அணியை எதிர்த்து பஞ்சாப் அணி மோதியது!

இந்தப் போட்டிக்கு முன்பு பஞ்சாப் அணி 10 ஆட்டங்களில் 10 புள்ளிகள் எடுத்து இருந்தது. கொல்கத்தா அணி 10 ஆட்டத்தில் 8 புள்ளிகள் எடுத்து இருந்தது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி ஏழு இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது.

அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி பரபரப்பான கடைசிப் பந்தில் வெற்றிக்கான ரன்னை அடித்து வெற்றி பெற்றது.

கடைசி ஓவருக்கு ஆறு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் ரசல் மற்றும் ரிங்கு சிங் இருவரும் இருந்தார்கள். அந்த ஓவரை அர்ஸ்தீப் சிங் வீசினார்.

- Advertisement -

முதல் பந்தை சந்தித்த ரசல் தவறவிட அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தில் ரிங்கு சிங் ஒரு ரன் எடுத்தார். நான்காவது பந்தில் ரசல் 2 ரன்கள் எடுத்தார். ஐந்தாவது பந்தை ரசல் தவறவிட ரிங்கு சிங் ஓடி வந்தார், ஆனால் ரசலால் ஓட முடியாததால், அவரை அர்ஸ்தீப் ரன் அவுட் செய்தார்.

இதை அடுத்து கடைசிப் பந்துக்கு இரண்டு ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. ரிங்கு சிங்கக்கு லெக் சைடு பீல்டிங் அமைத்த அர்ஸ்தீப் பந்தை புல்டாஸ் ஆக அந்தப் பகுதியில் வீசி விட, அதை எதிர்கொண்ட ரிங்கு சிங் அபாரமாக பவுண்டரி அடித்து கொல்கத்தா அணியை வெல்ல வைத்து, மீண்டும் ஒருமுறை கதாநாயகன் ஆனார்.

வெற்றிக்குப் பிறகு பேசிய ரிங்கு சிங்
“நான் கடைசி பந்து குறித்து எதுவும் யோசிக்கவில்லை. நான் ஐந்து சிக்ஸர்கள் அடித்த பொழுதும் அது குறித்து எதுவும் பெரிதாக யோசித்து இருக்கவில்லை.

ரசல் பந்தை தவறவிட்ட பொழுது நான் மேட்ச் டை ஆவது ஆகட்டும் என்றுதான் ஓடினேன். அப்பொழுது நான் ஓடி விட்டேனா என்பது மட்டும்தான் பார்த்தேன். ரசல் கொஞ்சம் மெதுவாக இருந்ததால் ஆட்டம் இழந்து விட்டார்.

நான் ஐந்திலிருந்து ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்து வருவதால், இந்த மாதிரி சூழ்நிலைகளுக்கு பேட்டிங் செய்வதற்காகத்தான் பயிற்சியும் செய்து வருகிறேன். எனவே சூழ்நிலைகள் புதிது கிடையாது!” என்று தெரிவித்திருக்கிறார்!