“பாகிஸ்தான் கூட இவர டீம்ல எடுக்காதிங்க.. எதுக்கும் யூஸ் இல்ல!” – இந்திய முன்னாள் வீரர் கடுமையான கருத்து!

0
1824
Shami

இந்திய அணி நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லியில் விளையாடி வெற்றி பெற்றது. இந்த போட்டி இந்திய அணிக்கு எதிர் பார்த்ததைவிட மிகவும் எளிதாகவே முடிந்தது.

இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினை நீக்க வேண்டாம், அப்படி நீக்கினால் அவரது இடத்தில் முகமது ஷமி விளையாட வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் கருத்து கூறி வந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி நிர்வாகம் நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வினை நீக்கிவிட்டு அவரது இடத்தில் சர்துல் தாக்கூருக்கு வழக்கம்போல் வாய்ப்பு கொடுத்தது.

அவர் விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் அவர் ஒரு ஓவருக்கு தரும் ரன் சராசரியாக ஆறுக்கும் மேல் இருந்து வருகிறது. இதன் காரணமாக அவர் ரன் அழுத்தத்தை ஏற்படுத்த தவற விடுகிறார். இதனால் எதிரணி விக்கெட்டை இழந்தாலும் கூட திடீரென்று ஆட்டத்திற்குள் வந்து விடுகிறது.

நிலைமை இப்படி இருக்க நேற்றைய போட்டியில் அவர் ஆறு இடங்களுக்கும் குறைவாக கொடுத்ததோடு, ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்தார். மேலும் முன்வரிசையில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆனாலும் அவர் 10 ஓவர்கள் வீசவில்லை.

- Advertisement -

தற்பொழுது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இவரது இடம் குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும்பொழுது ” சர்துல் இல்லை ஷமி இருவரில் யார் விளையாட வேண்டும் என்று எப்பொழுதும் விவாதம் இருந்து வருகிறது. நாம் ஷமி வேண்டுமென்று விவாதித்தோம். ஆனால் அணி நிர்வாகம் சர்துல் நோக்கி சென்றது.

எட்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங் தேவைப்படாது என்று கூறினேன். அப்படி தேவைப்பட்டால் அவர் வந்து அடிக்கக்கூடிய ஒன்று இரண்டு ஷாட்களை, வேறு ஒரு வீரர் அடிப்பார். எனவே பாகிஸ்தானுக்கு எதிராக ஷமி விளையாட வேண்டும் சர்துல் விளையாட கூடாது.

சர்துல் அவருடைய நிலையில் ஒரு பந்துவீச்சாளர். அவர் 20 பந்துகளில் 45 ரன்கள் எடுக்கக்கூடிய வீரர் கிடையாது. அவர் அப்படி விளையாடுவது இல்லை. பேட்டிங்கில் எட்டாவது இடத்தில் ஒரு சிறிய உத்திரவாதத்திற்காக மட்டுமே அவர் அணியில் தொடர்கிறார். இதற்கு ஷமி விளையாடுவதே நல்லது!” என்று கூறியிருக்கிறார்!