“இந்தியா தோற்கும்னு கனவுல கூட நினைக்காதிங்க.. இது நடந்தா மட்டும் உண்டு!” – பாக் முகமது யூசுப் அதிரடி அறிக்கை!

0
10308
ICT

நடப்பு உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுகள் பெரும்பாலான அளவு நடந்து முடிந்த பிறகு, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தன.

இதன் காரணமாக இந்த இரு அணிகளும் தங்களது எட்டாவது லீக் போட்டியில் விளையாடிய போட்டி முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. நடப்பு உலகக்கோப்பையின் சிறந்த அணி எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு முன்னாள் வீரர்களிடம் அதிகமாகவே இருந்தது.

- Advertisement -

இப்படிப்பட்ட எதிர்பார்ப்பில் இருந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 326 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் அதைவிட மிகச் சிறப்பாக செயல்பட்டு தென் ஆப்பிரிக்க அணியை 83 ரன்களில் சுருட்டி பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

இதன் காரணமாக இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா தனிப்பெரும் வலிமை கொண்ட ஒரு அணியாக இருந்து வருகிறது. இந்திய அணியுடன் விளையாடும் எல்லா அணிகளுமே தோல்வி அடைந்திருக்கின்றன.

இதன் காரணமாக அரையறுதியில் இந்திய அணியை சந்திக்கும் பொழுது அந்தத் தோல்வி குறிப்பிட்ட அணியின் மனதில் இருக்கும் அதுவே மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் முகமது யூசுப்இந்திய அணி பற்றி பேசும்பொழுது “இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு நடைபெறும் போட்டிக்கு முன்பாக இரு அணிகளும் சம பலத்தில் இருப்பதாக தெரிந்தது. இந்த போட்டிக்குப் பிறகு ஒரே ஒரு அணி மட்டுமே முன்னணியில் இருக்கிறது.

இந்தியா பேவரைட் ஆக இருக்கிறது. அதற்குக் காரணம் அவர்களிடம் சிறந்த தரம் கொண்ட பேட்ஸ்மேன்களும் பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள். மேலும் அவர்கள் நல்ல முறையில் பீல்டிங்கும் செய்கிறார்கள். அவர்கள் ஒரே யூனிட் ஆக விளையாடுகிறார்கள்.

இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் அவர்களுடைய முயற்சியும் கடின உழைப்பும் தெரிகிறது. இதில் ராகுல் டிராவிட்டின் பங்களிப்பையும் மறக்க முடியாது. டிராவிட் அணியை ஒருங்கிணைத்து சரியான திட்டமிடலுக்கு கொண்டு வந்திருக்கிறார். ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஒரு அழகான கெமிஸ்ட்ரியை கொண்டிருக்கிறார்கள்.

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா தோல்வியடையும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் தோல்வி அடைய வேண்டும் என்றால் துரதிஷ்டம் இருந்தால் மட்டுமே முடியும். அவர்கள் அனைத்து பெட்டிகளையும் டிக் செய்திருக்கிறார்கள். அவர்கள் அணியில் எந்த பலவீனமும் இல்லை!” என்று கூறி இருக்கிறார்!