“டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலை இப்படி நடத்தாதிங்க” – அஷ்வின் தந்த மாஸ் ஐடியா!

0
247
Ashwin

டெஸ்ட் கிரிக்கெட்டை சுவாரசியப்படுத்தி ரசிகர்களை மைதானத்திற்கு கொண்டு வரவும், மேலும் இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டை தொடர்ந்து வாழ வைக்கவும் ஐசிசி முடிவு செய்து, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் தொடரை நடத்தி வருகிறது.

இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில், முதலாவது தொடரை நியூசிலாந்து அணியும், இரண்டாவது தொடரை ஆஸ்திரேலிய அணியும் கைப்பற்றியது.

- Advertisement -

இந்த இரண்டு தொடர்களிலும் இரண்டு ஒற்றுமைகள் உள்ளது. இந்த இரண்டு தொடர்களின் இறுதிப் போட்டியுமே இங்கிலாந்தில் வைத்து நடத்தப்பட்டது. மேலும் இந்த இரண்டு தொடர்களின் இறுதிப் போட்டிகளும் விளையாடிய ஒரே அணியாக இந்தியா இருக்கிறது.

இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றாலும் கூட, இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வெல்ல முடியவில்லை. இந்திய அணிக்கு இது பெரிய சோகமான வரலாறாக மாறும் ஆபத்து இருக்கிறது.

தற்பொழுது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டம் இரண்டு வருடங்களுக்கு நடத்தப்பட்டு, சாம்பியன் யார் என்பதை கண்டறிவதற்கு ஒரே ஒரு போட்டி கொண்ட இறுதிப்போட்டி மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

- Advertisement -

தற்பொழுது இந்த முறையை மாற்றி அமைத்து புது முறையை கொண்டு வருவது சிறப்பான ஒன்றாக இருக்கும் என்று இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருதுகிறார். இது சம்பந்தமாக அவர் ஐசிசிக்கு தனது யோசனை ஒன்றையும் முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும்போது “நாங்கள் இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தோம். இதை நான் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் டெஸ்ட் தொடர் எனும் பொழுது திரும்பி வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

நாங்கள் இரண்டு முறை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக இங்கிலாந்தில் வைத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடினோம். அந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் நாங்கள் தோல்வி அடைந்தோம். ஆனால் அதுவே ஒரு இறுதிப் போட்டியாக இல்லாமல், ஒரு டெஸ்ட் தொடராக இருக்கும் பட்சத்தில் நாங்கள் திரும்பி வர வாய்ப்பு உள்ளதுதானே?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஒரே போட்டியாக நடத்தாமல், ஒரு டெஸ்ட் தொடராக நடத்துவதற்கு ஐசிசி யோசிக்க வேண்டும். அதற்கான காலம் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். இதுகுறித்து ஐசிசி முடிவு செய்ய வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!