“சச்சினையும் விராட் கோலியையும் கம்பேர் பண்றவனுக்கு கொஞ்சமும்…” – இருவரின் ஒப்பீட்டை கடுமையாக விமர்சித்த வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்!

0
1796

“சச்சினையும் விராட் கோலியையும் ஒருபோதும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது. இருவருக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கின்றன.” என்று சமீபத்தில் இருவரையும் ஒப்பிட்டு பேசுவது குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கோர்ட்லி ஆம்ப்ரோஸ்.

தற்போது இந்திய அணியின் தலைசிறந்த வீரராக திகழ்ந்துவரும் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 500ஆவது போட்டியை நிறைவு செய்தார்.

- Advertisement -

தன்னுடைய 500ஆவது போட்டியில் 121 ரன்கள் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் 76ஆவது சதம் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 29ஆவது சதத்தை நிறைவு செய்தார். இதுவரை ஒட்டுமொத்தமாக வெறும் 10 பேர் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் 500 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர். விராட் கோலி பத்தாவது வீரராக இருக்கிறார்.

இந்திய வீரர்கள் மத்தியில் சச்சின் டெண்டுல்கர், எம் எஸ் தோனி மற்றும் தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகிய மூவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி நான்காவது வீரராக 500ஆவது சர்வதேச போட்டியை நிறைவு செய்திருக்கிறார்.

விராட் கோலி விளையாடத் தொடங்கிய சில வருடங்களிலேயே சச்சின் டெண்டுல்கர் உடன் இவரது பல்வேறு சாதனைகள் ஒப்பிடப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட விராட் கோலி 500ஆவது போட்டியின் போது இருவரும் தங்களுடைய 500ஆவது போட்டியை நிறைவு செய்தபோது எத்தனை அரைசதங்கள்? எத்தனை சதங்கள்? மற்றும் எத்தனை ரன்கள்? குவித்திருந்தனர் என்ற ஒப்பீடு காண்பிக்கப்பட்டது.

- Advertisement -

சச்சின் மற்றும் விராட் கோலி இருவரின் ஒப்பீடு குறித்தும் அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கோர்ட்லி ஆம்ப்ரோஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

“சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசியவனாகவும் தற்போது விராட் கோலியின் பேட்டிங்கை கவனித்து வருபவனாகவும் சொல்கிறேன். இருவரையும் ஒப்பிடுவதில் எனக்கு துளியும் உடன்பாடு இல்லை. இருவருக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கின்றன. மேலும் இருவரும் கடந்து வந்த பயணங்கள் வெவ்வேறாகவும் இருப்பதால் ஒப்பிடுவது சரியாக இருக்காது என்பதே என்னுடைய கருத்து.

மேலும் விராட் கோலி சில வருடங்கள் சதம் அடிக்காதது குறித்து கருத்து தெரிவித்தார் ஆம்ப்ரோஸ். அவர் பேசியதாவது:

“எப்பேர்ப்பட்ட தலைசிறந்த வீரருக்கும் தங்களுடைய கிரிக்கெட் கரியரில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதுபோல தான் விராட் கோலி அந்த சமயத்தில் சதங்கள் அடிக்கவில்லையே தவிர, நன்றாகவே பேட்டிங் செய்து வந்தார். கடந்த காலங்களில் அப்படி நடந்திருக்கிறது. அதேபோல் இப்போதும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மனதளவில் சரியாகப்பட்டாலும் அது உண்மையில் சரியில்லை.

விராட் கோலி பேட்டிங் வெற்றிக்கு எந்த அளவிற்கு பங்களிப்பை கொடுத்து வருகிறது என்பதை மட்டுமே கவனிக்க வேண்டும். விராட் கோலியும் தன்னுடைய மைல்கல்லை ஒருபோதும் கவனிப்பதில்லை. அணிக்க தேவையானதை விளையாடி வருவதாகவே நானும் பார்க்கிறேன். ஆகையால் இதை நன்றாக கையாண்டார். தற்போது மீண்டும் பார்மிற்கு வந்திருக்கிறார்.” என்று ஆம்ப்ரோஸ் பேசினார்.