“கோலி கூட பாபர் அசாமை கம்பேர் பண்ணாதிங்க.. ஒரே கிங் மட்டும்தான்!” – இந்தியா முன்னாள் வீரர் வெளியிட்ட வெளிப்படையான கருத்து!

0
1511
Virat

நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஒரு ஏழு, எட்டு பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டிருந்தது.

இதில் இந்திய அணியின் விராட் கோலியும் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாமும் பலரின் கணிப்பில் முன்னிலையில் இருந்தார்கள்.

- Advertisement -

இப்படி இருக்க பாபர் அசாம் உலகக்கோப்பை தொடரில் 4 போட்டிகள் விளையாடி இன்னும் நூறு ரன்களை முழுமையாக எடுக்கவில்லை.

அதே சமயத்தில் விராட் கோலி இரண்டு அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் என 250 ரன்களை தாண்டி மிகச் சிறப்பான பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். மேலும் அழுத்தமான நேரத்தில் அவர் பேட்டில் இருந்து ரன்கள் வருகிறது.

கடந்த டி20 உலகக் கோப்பையிலும் இப்படியான கணிப்புகள் இருந்தன. ஆனால் அதிக ரன்கள் குவித்த வீரராக விராட் கோலிதான் வெளியில் வந்தார். மிக மோசமான பேட்டிங் செயல்பாட்டை கொண்டு இருந்தார்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா “உலகம் பாபரை மதிப்பிடுகிறது. அவரைக் கிங் என்று அழைக்கிறது. அவர் விராட் கோலிக்கு இணையானவர் இல்லை விராட் கோலியை விட சிறந்தவர் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த நேரத்தில் பாபர் அப்படி எதுவுமே கிடையாது. விராட் கோலியின் பக்கத்தில் கூட அவர் இல்லை.

நான் உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். பாபர் இப்பொழுது தான் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். ஆனால் விராட் கோலி ஏற்கனவே போய் சேர வேண்டிய இடத்திற்கு சென்று விட்டார். அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 48 சதங்கள் என மொத்தம் 79 சதங்கள் அடித்து இருக்கிறார்.

இது வெறும் சதங்கள் பற்றிய விஷயமும் கிடையாது. விராட் கோலி எப்படியான பெரிய ஆட்டங்களில் சாதிப்பவராக இருக்கிறார் என்று பார்க்க வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு வின்னிங் நாக் விளையாடினார். ஆனால் அதே ஆஸ்திரேலியாவுடன் தேவைப்பட்ட பொழுது நேற்று பாபரால் விளையாட முடியவில்லை. இதனால்தான் சொல்கிறேன் கிங் பக்கத்தில் பாபர் கிடையாது!” என்று கூறி இருக்கிறார்!