“கோலி ரோகித்தை நம்பி இல்லை; ஆசிய கோப்பையை தக்க வைப்போம்” – இலங்கை லெஜன்ட் சமிந்தா வாஸ் நம்பிக்கை!

0
950
Vaas

இந்திய அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருக்கின்றது. இதற்கு அடுத்து இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக அயர்லாந்து சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது!

இதற்கு அடுத்து இந்திய அணி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் இலங்கை மண்ணில் விளையாட இருக்கிறது. ஆசிய கோப்பை ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்குகிறது. இந்தியா தனது பிரிவில் இடம் பெறும் பாகிஸ்தான் அணியை எதிர்த்து செப்டம்பர் இரண்டாம் தேதி விளையாடுகிறது.

- Advertisement -

இந்த முறை ஆசிய கோப்பை தொடர் ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்து அக்டோபர் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆசியக் கோப்பைத் தொடர் இந்தியா பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு சிறந்த பயிற்சியாக அமையும்.

தற்பொழுது இலங்கை அணியின் லெஜெண்ட் வேகப்பந்துவீச்சாளர் சமிந்தா வாஸ் ஆசிய கோப்பை குறித்தும், இந்திய அணி குறித்தும், இலங்கை அணியின் ஆசிய கோப்பை வெற்றி வாய்ப்பு குறித்தும் முக்கியமான சில விஷயங்களை பேசி இருக்கிறார். மேலும் கடந்த முறை டி20 வடிவத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து இலங்கை அணி கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமிந்தா வாஸ் கூறுகையில் “இந்திய அணியை எடுத்துக் கொண்டால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மட்டுமே துருப்பு சீட்டுகள் கிடையாது. ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் போன்ற எத்தனையோ இளம் கிரிக்கெட் வீரர்கள் துருப்பு சீட்டுகளாக இருக்கிறார்கள். ஜெய்ஸ்வால், கில் நன்றாக விளையாடுகிறார்கள்.

- Advertisement -

இந்தியாவில் நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே போட்டி போடுவார்கள். பேட்டிங் என்று வரும் பொழுது இந்தியா ரோகித் மற்றும் விராட் கோலியை மட்டுமே நம்பி இருக்காது என்று நினைக்கிறேன். மற்றவர்களும் இதற்கான போட்டியில் இருப்பார்கள். விராட் கோலி மற்றும் ரோஹித் சிறப்பாக செயல்பட்டால் பெரும்பாலும் இந்திய அணி வெற்றி பெறும்.

பும்ரா தலைசிறந்த வீரர்களில் ஒருவர் என்பதை நாங்கள் அறிவோம். அவர் செயல்பட்ட விதத்தில் அவர் நிலையான வீரர். இந்தியா உண்மையில் அவரது சேவைகளை பெற விரும்புகிறது. இருப்பினும் அவரது காயத்தால் நிலைமை என்னவென்று சரியாக தெரியவில்லை. பயிற்சியாளர் மற்றும் பிசியோ இருவரும் அவருடன் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர் உடல் தகுதி பெற்றால், அது இந்தியாவுக்கு உலகக்கோப்பையில் மிகப்பெரிய நன்மையாக அமையும்.

தற்போதைய ஆசிய சாம்பியனான இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க விரும்புவதுடன் தொடரில் தன்னால் முடிந்ததை செய்ய முயற்சிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மற்ற எல்லா அணிகளிலும் இந்தியா பாகிஸ்தான் மட்டுமல்லாது பங்களாதேஷ் ஆப்கானிஸ்தானிலும் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள்.

இதில் எதையும் கணிப்பது சற்று கடினமான விஷயம். சூழல் மற்றும் ஆடுகளத்திற்கு ஏற்ப விளையாடக்கூடிய அணி ஆசியக் கோப்பை மற்றும் உலக கோப்பையை வெல்லக்கூடிய அணியாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!