“சதமா முக்கியம்? வெற்றிதான் முக்கியம்.. தனிப்பட்ட சாதனை வெறிதான் தோல்விக்கு காரணம்!” – கேஎல்.ராகுல் மற்றும் இந்திய வீரர்கள் மீது கம்பீர் தாக்கு!

0
326
Gambhir

இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியை வென்று அசத்தலாக ஆரம்பித்திருக்கிறது.

இந்தப் போட்டியில் கேஎல்.ராகுல் இறுதிவரை நின்று 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார். உடனென்று விளையாடிய விராட் கோலி 85 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து இருந்தார்.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் கடைசியில் செய்த ஒரு விஷயம் தற்பொழுது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. அவர் இறுதியில் அணியை சிக்சர் அடித்து வெல்ல வைத்ததற்கு மகிழாமல், பவுண்டரி சென்று இருந்தால், அடுத்து சிக்ஸர் அடித்து சதம் அடித்திருக்கலாம் என்று வருத்தப்பட்டார். இதுதான் தற்பொழுது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

இது குறித்து பேசி உள்ள கௌதம் கம்பீர் கூறும் பொழுது ” நீங்கள் 30, 40 இல்லை 140 எவ்வளவு ரன் எடுக்கிறீர்கள் என்பது முக்கியமே கிடையாது. நீங்கள் எடுக்கக்கூடிய ரன்களால் அணி வெற்றி பெற்றதா? என்பது மட்டும்தான் முக்கியமானது. ஐசிசி நாக் அவுட் போட்டியில் நீண்ட காலமாக ஜெயிக்காமல் இருப்பதற்கு, தனிப்பட்ட வீரர்களின் புள்ளிவிபரம் மீதான வெறியே காரணம் என்று நினைக்கிறேன்.

தனிப்பட்ட வீரர்களின் புள்ளிவிபரங்கள் மீதான மோகத்தை முடித்துக் கொள்ள வேண்டும். சதம் அடிப்பது முக்கியமில்லை, உங்கள் அணியை நீங்கள் வெற்றிக்கு அழைத்துச் சென்றீர்களா? என்பது மட்டுமே முக்கியம்.

- Advertisement -

இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் பதட்டத்தில் இருந்திருக்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலக கோப்பையில் விளையாடும் பொழுது இளைஞர்களுக்கு இது பெரிய விஷயம். எனவே அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். பரவாயில்லை இது எந்த வீரருக்கும் நடக்கலாம்.

நான் எனது முதல் உலகக் கோப்பை போட்டியை டாக்காவில் விளையாடும் பொழுது ஆரம்பத்தில் எனக்கு பதட்டம் இருந்தது. நான் எனது முதல் பந்தை விளையாடிய பிறகு அமைதி அடைந்தேன். இந்தப் போட்டியில் ஸ்ரேயாஸ் மற்றும் இசான் கிசானை நான் பார்க்க மாட்டேன்.

இந்த இரண்டு வீரர்களும் மிகச்சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். அதனால்தான் உலகக் கோப்பை இந்திய அணிகள் இடம் பெற்றதோடு விளையாடும் அணியிலும் இடம் பெற்று இருக்கிறார்கள். இவர்கள் முதல் ரன்னை விளையாடியதும் இவர்களிடமிருந்து நல்ல ஆட்டம் வெளிப்படும் என்று நான் நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்,