“பாகிஸ்தானுக்கு உலக கோப்பையில் கிரவுண்ட் மாற சான்ஸ் இருக்கா?” – அஸ்வின் வெளியிட்ட சுவாரசிய தகவல்!

0
211
Ashwin

வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஐந்து கிரிகெட் அணிகள் மோதிக் கொள்ளும் ஆசியக் கோப்பைத் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வைத்து நடக்க இருக்கிறது!

இந்த முறை ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகமும் இந்திய அரசும் இந்திய அணி பாகிஸ்தான் செல்வதை விரும்பவில்லை.

- Advertisement -

இது தொடர்பாக பேச்சுவார்த்தை இழுபறியான நிலையில் இருந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. பாகிஸ்தானில் வைத்து நான்கு ஆட்டங்களும் இலங்கையில் வைத்து 9 ஆட்டங்களும் என்று ஒரு வழியாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

தற்பொழுது ஆசியக் கோப்பை தொடர் பிரச்சினை முடிந்ததும் இந்தியாவில் வைத்து நடத்தப்படும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை பிரச்சனை ஆரம்பித்து இருக்கிறது.

பாகிஸ்தான் அணிக்கு ஆப்கானிஸ்தான் அணி உடன் சென்னையிலும் ஆஸ்திரேலியா அணியுடன் பெங்களூரிலும் அட்டவணை தயார் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து மாற்றி இடங்களை தருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் உலகக் கோப்பை அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் ” சென்னையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும் என்று தெரிவித்து பாகிஸ்தான் தங்களது கோரிக்கையை கடிதத்திலேயே கூறியுள்ளது. இப்பொழுது மைதானத்தை மாற்றுவது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையும்.

எனவே இந்த கோரிக்கைக்கு ஐசிசி சம்மதிக்காது என்று நினைக்கிறேன். ஒருவேளை பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு இருந்தால் ஐசிசி போட்டிகளை மாற்றுவது பற்றி யோசித்திருக்கும்.

பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே ஐசிசி இப்படியான கோரிக்கைகளை பரிசீலிக்கும். 2016 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி தர்மசாலாவில் நடத்தப்படுவதாக இருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கொல்கத்தாவில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது!” என்று கூறியுள்ளார்!