“ஹர்திக் பாண்டியா எனக்கு எதிரா இருக்காரா?” – சாய் கிஷோர் மனம் திறந்த பேட்டி!

0
776
Hardikpandya

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான நடைபெற்ற மெகா ஏலத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த அணியாக கணிக்கப்பட்டது ஆசிஸ் நெக்ரா ஏலக்குழுவின் முன்னணியில் இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்குழுதான்!

அவர்கள் ஏலத்தில் சம்பந்தமே இல்லாத வீரர்களை சம்பந்தமே இல்லாத இடங்களுக்கு வாங்கி குவித்து கொண்டு இருப்பது போல தெரிந்தது. மேலும் அவர்கள் பந்துவீச்சாளர்களுக்கு மிக அதிக அளவில் பணத்தைக் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

- Advertisement -

இதனால் அவர்களுக்கு திடீரென்று விக்கெட் கீப்பர்களே இல்லாமல் இருந்து. நடுவில் ஏலத்தில் திடீரென்று விக்கெட் கீப்பர்களிடம் போய் வாங்கினார்கள். அதேபோல அவர்களிடம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்று யாருமே இல்லை. எல்லோருமே இறுதி கட்டத்தில் விளையாட கூடிய பேட்ஸ்மேன்களாக இருந்தார்கள்.

இந்த காரணத்தால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக ரசிகர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் விமர்சகர்களில் நிறைய பேர் குஜராத் அணி புள்ளி பட்டியலில் இறுதி இடத்தையே பிடிக்கும் என்று தங்களது கணிப்பை கூறியிருந்தார்கள். ஆனால் அந்த அணிதான் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்ததோடு முதல் முறையாக வந்து ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.

இந்த அணிக்கு மூன்று கோடி ரூபாய்க்கு தமிழகத்தைச் சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 20 லட்சம் ரூபாய்க்கு இடம் பெற்று இருந்த சாய் கிஷோர் 3 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். அதே சமயத்தில் 5 போட்டிகளில் இறுதிப்போட்டியோடு சேர்த்து அவருக்கு விளையாட வாய்ப்பும் கிடைத்தது. அவர் மொத்தமாக ஆறு விக்கெட்டுகளையும் சிறப்பான முறையில் பந்து வீசி எடுத்திருந்தார். ஆனால் இந்த முறை அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருடைய இடத்தில் ரஷீத் கானுடன் இணைந்து, அவரது நாட்டைச் சேர்ந்த நூர் அகமது இடம்பெற்று அசத்தியிருந்தார்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து மனம் திறந்து பேசி உள்ள சாய் கிஷோர் “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஆஷிஷ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் மனதார மிகவும் நல்ல மனிதர்கள். அவர்களுக்கு மனதுக்குள் ஒன்றை வைத்து வெளியில் ஒன்றை பேசவே தெரியாது. எது உண்மையோ அதை அவர்கள் மிக நேரடியாக வெளியே சொல்லி விடுவார்கள். என்மேலும் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு நல்ல மரியாதை இருக்கிறது.

எனக்கு வாய்ப்பு தர முடியாத நிலைமை இருந்தது. ஹர்திக் பாண்டியா என்னிடம் ‘நீ கடந்த முறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறாய். ஆனாலும் உனக்கு வாய்ப்பு தரக்கூடிய நிலைமை அணியில் இல்லை. இது எனக்கும் வருத்தமாகவே இருக்கிறது’ என்று கூறியிருந்தார். எனக்கு எதிராக அவர் செயல்பட்டு அவருக்கு என்ன வரப் போகிறது?!

மேலும் என்னுடைய கேரியரையெல்லாம் நம்பி அவர் பொறுப்பில் விட்டுவிட்டு அப்படியே இருக்கலாம். எல்லாவற்றையும் அவரே பார்த்துக் கொள்வார். அந்த அளவிற்கு அவர் நேர்மையானவர் நல்லவர்!” என்று கூறியிருக்கிறார்.