இங்கிலாந்து நம்பிக்கை நட்சத்திரம் திடீர் ரூல்டு அவுட்.. ஆர்சிபிக்கு வந்த பிரச்சனை.. முக்கிய தகவல்கள்

0
460
Buttler

இங்கிலாந்து அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து ஒரு முக்கிய நட்சத்திர வீரர் ரூல்டு அவுட் ஆகியிருக்கிறார். இது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

தற்போது சாம்பியன் டிராபி தொடருக்கு முன்பாக இந்தியா வந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒன்றுக்கு நான்கு என இங்கிலாந்து இழந்தது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை தோற்று ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் இழந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இங்கிலாந்து அணி நிர்வாகத்தின் மோசமான திட்டம்

தற்போது இங்கிலாந்து அணி நிர்வாகம் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை சாம்பியன்ஸ் டிராபிக்கான பயிற்சி தொடராகவும் பரிசோதனை தொடராகவும் பார்த்து வருகிறது. ஆனால் இதில் இருக்கும் பெரிய சிக்கல் என்னவென்றால் அந்த அணி அருகில் பெரிய வெற்றிகள் எதையும் பெறாமல் இருந்து வருகிறது. எனவே அந்த அணிக்கு தன்னம்பிக்கை ரீதியாக பின்னடைவு இருக்கிறது.

இப்படியான நிலையில் தங்களுடைய வலிமையான பிளேயிங் லெவனை களத்தில் இறக்கி வெற்றி பெற்று வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் இங்கிலாந்து அணி நிர்வாகம் தொடர்ந்து பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்து வருகிறது. தற்பொழுது இங்கிலாந்து அணி நிர்வாகத்தின் இந்த அணுகுமுறை விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

- Advertisement -

மோசமான சூழ்நிலையில் பெரிய பின்னடைவு

இப்படியான மோசமான சூழ்நிலையில் இங்கிலாந்து அணிக்கு மோசமான ஒரு பின்னடைவாக 21 வயதான இடது கை பேட்டிங் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஜேக்கப் பெத்தேல் தசைப்பிடிப்பின் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து ஒட்டுமொத்தமாக ரூட் அவுட் ஆகி இருக்கிறார் என்று கேப்டன் ஜோஸ் பட்லர் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். இவர் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணிக்காக வாங்கப்பட்ட முக்கிய வீரராக இருக்கிறார். ஐபிஎல் அருகில் இருக்க இவர் ஆர்சிபி அணிக்கு விளையாடுவாரா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இதையும் படிங்க : கில் இதனாலதான் பெஸ்ட் பேட்ஸ்மேன்.. இங்கிலாந்து பிளேயர்ஸ் பார்த்து கத்துக்கோங்க – கெவின் பீட்டர்சன் விமர்சனம்

இதுகுறித்து பேசி இருக்கும் ஜோஸ் பட்லர் கூறும் பொழுது ” நான் நேர்மையாக இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். இதன் காரணமாக என்ன சொல்கிறேன் என்றால் ஜேக்கப் பெத்தேல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து காயத்தின் காரணமாக முழுமையாக வெளியேறி விட்டார். அவர் விளையாடிய வரையில் சிறப்பாக விளையாடினார் மிகவும் உற்சாகமான வீரராக இருந்தார். அவரை காயம் தொடரில் இருந்து விலக்கப் போகிறது என்பது அவமானகரமானதாக இருக்கிறது” என்று வருத்தத்துடன் கூறி இருக்கிறார்.

- Advertisement -