டி20 உலகக்கோப்பைக்கு பின் அறுவைசிகிச்சை செய்திருக்கலாம், எதற்காக முன்னரே செய்தேன்? – ரவீந்திர ஜடேஜா பேட்டி!

0
689

6 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ள ரவீந்திர ஜடேஜா, மனம் திறந்து பிசிசிஐ டிவிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

இந்திய அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கடந்த செப்டம்பர் மாதம் காலில் ஏற்பட்ட காயத்தினால் சர்வதேசப் போட்டிகளில் இருந்து விலகினார்.

- Advertisement -

டி20 உலக கோப்பைக்குள் அவர் இருப்பாரா? மாட்டாரா? என்கிற சந்தேகங்கள் வந்தது. அந்த சமயத்தில் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்காக டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அவரே பிசிசிஐ-க்கு தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் டி20 உலக கோப்பை அணியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். டி20 உலகக்கோப்பை துவங்குவதற்கு முன்பாகவே அறுவை சிகிச்சை மேற்கொண்டு இந்திய தேசிய அகடமியில் தீவிர சிகிச்சையிலும் இருந்து வந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் இவருக்கு குணமடைந்து விட்டது. ஆனாலும் இவரது விஷயத்தில் அவசரம் காட்டாமல் பொறுமையாக நீண்ட ஓய்வு கொடுத்து பிசிசிஐ இவரை மீண்டும் அணியில் எடுத்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இவர் பெயர் இடம்பெற்று இருந்தது. ஆனால் பி சி சி ஐ நிபந்தனையும் விதித்திருந்தது.

அதாவது உள்ளூர் போட்டிகளை விளையாடி தனது உடல் தகுதியை நிரூபித்தால் மட்டுமே மீண்டும் அணிக்குள் இடம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தது. அதன்படி ரஞ்சிக்கோப்பையில் விளையாடி தனது உடல் தகுதியையும் நிரூபித்து விட்டு மீண்டும் இந்திய அணிக்குள் திரும்பினார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் நாக்பூர் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ரவீந்திர ஜடேஜா ஈடுபட்டு வந்தார். அப்போது பிசிசிஐ டிவிக்கு அவர் கொடுத்த பேட்டியில், காயமடைந்த போது இருந்த மனநிலை மற்றும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

“சுமார் ஐந்து ஆறு மாதம் கழித்து மீண்டும் இந்த ஜெர்சியை அணியும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இங்கு வந்தடைவது எளிதாக அமையவில்லை. பல ஏற்ற இறக்கங்களாக இருந்தது. சுமார் ஐந்து மாத காலம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தது மிகவும் வெறுப்புணர்வை எனக்கு கொடுத்தது. ஆகையால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் எனது உடல் தகுதியை நிரூபித்து மீண்டும் அணிக்குள் வர வேண்டும் என்று துடித்தேன்.” என்றார்.

மேலும் அறுவை சிகிச்சை பற்றி பேசிய அவர், “டி20 உலகக்கோப்பைக்கு பின்னர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாமா? அல்லது முன்னர் செய்து கொள்ளலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். டி20 உலகக்கோப்பையில் நான் இடம்பெறுவதற்கு மிகக் குறைந்த வாய்ப்புகளை இருப்பதாக உணர்ந்தேன். ஆகையால் காலம் தாழ்த்தாமல் விரைவாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தினார். அதன்படி செய்துகொண்டு தொடர்ந்து சிகிச்சை மற்றும் பயிற்சி மட்டுமே செய்துவந்தேன். உலகக்கோப்பை போட்டிகளை டிவியில் பார்க்கும் பொழுது நான் அங்கு இருக்க ஆசைப்பட்டேன். மிகவும் வருத்தம் அளித்தது. சில நேரங்களில் மன உளைச்சல் ஆகவும் இருந்தது.” என்றார்.