“நீ பாராட்டறயா விமர்சனம் பண்றியாப்பா?” – பாகிஸ்தான் அணி பற்றி சோயப் அக்தர் வித்தியாசமான பேச்சு!

0
519
Akthar

பதிமூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான அணி பரிதாபமாக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது.

இத்தோடு பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பும் ஏறக்குறைய முடிவுக்கு வந்திருக்கிறது. அந்த அணியின் தொடர் தோல்விகள் பாகிஸ்தான் தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்களை ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் இருந்து கொண்டு வருகிறது.

- Advertisement -

உலகக் கோப்பை தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்னால் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருந்தது. முதல் இடத்தில் இருந்த ஒரு அணி அடுத்த சில வாரத்தில் உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெறாமல் முதல் சுற்றோடு வெளியேறுவது, பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி நல்ல முறையில் போராடி தோற்றது என்று மேலோட்டமாக சொல்லலாம். ஆனால் அவர்கள் 50 ஓவர்களை முழுதாக ஆட வாய்ப்பு இருந்தும் 20 பந்துகள் மீதம் இருக்க ஆல் அவுட் ஆனார்கள்.

மேலும் பந்து வீச்சில் சரியான இடங்களில் பீல்டர்களை வைக்காதது, மேலும் சரியான நேரத்தில் சரியான பந்துவீச்சாளர்களை கொண்டு வராதது என்று பாபர் அசாம் தன்னுடைய முறைக்கு தவறுகளை செய்து கொண்டிருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள பாகிஸ்தான அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறும் பொழுது “இந்த சிறப்பான செயல்பாடு கொஞ்சம் தாமதமாக வந்துள்ளது. பாகிஸ்தான் அணி ஒரு அற்புதமான வேலையை செய்திருக்கிறது. அணியின் எல்லா பந்துவீச்சாளர்களும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள். வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை பெற வேண்டும் என்று அவர்கள் உண்மையில் விரும்பினார்கள். துரதிஷ்டவசமாக அது நடக்கவில்லை என்றாலும் செயல்பாடு அற்புதமானது.

பாகிஸ்தான் நிறைய டாட் பந்துகளை விளையாடியது. பவர் பிளேவில் பேட்ஸ்மேன்கள் நிறைய நேரம் எடுக்கிறார்கள். ஷாகின் பந்து வீசும் பொழுது ஸ்லிப் இருந்திருக்க வேண்டும். மேலும் பீல்டிங் செட்டப் இன்னும் அட்டாக்கிங் முறையில் இருந்திருக்க வேண்டும்.

ஆனாலும் கூட அணி நன்றாகவே செயல்பட்டது. என் இதயம் என் அணியின் பக்கமாக சாய்கிறது. ஆனாலும் இந்த நேரத்தில் அவர்கள் 300 ரன்கள் எடுத்திருக்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!