உங்களுக்கு அஷ்வின் ஷமி விளையாடனுமா? உலக கோப்பையை ஜெயிக்கனுமா? – இந்திய தேர்வுக்குழு முன்னாள் தலைவர் கோபம்!

0
627
Ashwin

இந்தியாவில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 13வது உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு கலவையும் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.

அதே சமயத்தில் இந்திய அணிக்கு எட்டாவது இடத்தில் யார் விளையாடுவது? என்பது தொடர்பாக பெரிய விவாதங்கள் ஒவ்வொரு போட்டியின் போதும் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என சென்று கொண்டே இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலைமையை எடுத்துக் கொண்டால், இந்திய அணியில் எட்டாவது இடத்தை ஒன்று அஸ்வினுக்கு தர வேண்டும், இல்லை முகமது சமிக்கு தரவேண்டும் என்பதாகத்தான், பலரது கருத்துகளும் இடம் பெற்று வருகின்றன.

அந்த இடத்தை வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்கின்ற அடையாளத்தில் சர்துல் தாக்கூருக்கு தரக்கூடாது என்று பலரும் கருதுகிறார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான கடந்த போட்டியில் அவர் இரண்டு ஓவர்கள் மட்டுமே பந்து வீசவைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுகுறித்து பேசி உள்ள இந்திய தேர்வுகளும் முன்னாள் தலைவர் எம்எஸ்கே.பிரசாத் கூறும்பொழுது “நம்முடைய அணித் தேர்வுக்குழு செய்வது மிகவும் சரியான ஒன்று. ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகம் என்றால் அஸ்வின் விளையாடலாம். அதுவே ஆடுகளம் கொஞ்சம் தட்டையாக இருக்கிறது என்றால் சர்துல் தாக்கூர் விளையாடலாம்.

- Advertisement -

இந்த இடத்தில் சமி உடைய நிலைமை கவலைக்குரிய ஒன்று. பும்ரா மற்றும் சிராஜ் இருவரில் ஒருவர் விளையாடவில்லை என்றால் மட்டுமே அவருக்கான வாய்ப்பு கிடைக்கும். இவர்கள் இப்படியான சமநிலையுடன் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறார்கள்.

நீங்கள் இதுகுறித்து அஸ்வின் இடம் கேட்டால் அவர் அணி நிர்வாகத்தின் இந்த முடிவை கட்டாயம் ஏற்றுக் கொள்வார். நாம் சாம்பியன்ஷிப்பை வெல்ல வேண்டுமா? இல்லை நற்பெயர் எடுப்பதை பார்க்க வேண்டுமா?

ஒரு ரசிகனாக முகமது சமி வெளியில் இருப்பதை பார்க்க எனக்கும் கஷ்டமாகவே இருக்கிறது. ஆனால் கேப்டனின் பார்வையில் பார்த்தால் அவர் எடுக்கும் முடிவுகள் மிகவும் அற்புதமானவை. அவர் நற்பெயர் பெறுவதைப் பற்றி யோசிக்கவில்லை.

குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக மிகச் சரியான பிளேயிங் லெவலுடன் களம் இறங்கி போட்டியை வெல்வது மட்டுமே இங்கு முக்கியமான ஒன்று!” என அவர் கூறியிருக்கிறார்,